நீங்க இந்த மாதிரி டிரெஸ்சே போட மாட்டீங்களே... கிளாமர் ஹீரோயினை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
சென்னை: சிவப்பு நிற ஆடையில் நடிகை மீரா மிதுனின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்திமாறி ஆகிய படங்களில் நடித்தவர் மீரா மிதுன். சர்ச்சைகளுக்கும் இவருக்கும் அப்படியொரு பொருத்தம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அவர், அங்கிருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த பின் மீரா, விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் பிரபலங்கள் மீது பரபரப்பு புகார் கூறினார்.

கிளாமர் போட்டோ
இதனால் அடுத்தடுத்து படங்களில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் மீரா, அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிடுவது வழக்கம்.
டென்ஷன்
இவரது ஓவர் கிளாமர் படங்களை கண்டு, ரசிகர்கள் சரமாரியாக விளாசித்தள்ளுவதும் நடக்கும். அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கிளாமர் ஸ்டில்களை பதிவேற்றி ரசிகர்களை டென்ஷனாக்கி வருகிறார் மீரா மிதுன்.
சிவப்பு நிறம்
அவர் இப்போதும் லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற உடை அணிந்துள்ள அவரது போட்டோவை கண்டு ரசிகர் ஒருவர், என்னங்க ரெட் அலர்ட்டா? என்று கேட்டுள்ளார்.
முரட்டு சிங்கிள் ரியாக்ஷன்
மற்றொருவர், என்ன நீங்க ஃபார்மல் டிரெஸ் போட்டிருக்கீங்க? என்று ஆச்சரியமாக கேட்டுள்ளார். இன்னொரு ரசிகர் நானும் ரவுடிதான் தாத்தாவின் புகைப்படத்தை பதிவிட்டு முரட்டு சிங்கிளின் ரியாக்ஷன் இது என்று தெரிவித்துள்ளார்.
இந்த பிழைப்புக்கு... என்று ரசிகர் ஒருவர் கடுமையாகத் திட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











