ரஜினிகாந்தும் விஜயும் எனக்கு அநீதி இழைக்கிறார்கள்.. பச்சையாக பேசி அதிரடி காட்டும் சர்ச்சை நடிகை!

சென்னை: ரஜினிகாந்தும் விஜயும் எனக்கு அநீதி இழைக்கிறார்கள் என சர்ச்சை நடிகையான மீரா மிதுன் குற்றம்சாட்டியுள்ளார்.

Recommended Video

Meera Mithun நிஜ சாதனைகள் • Super Model, Miss TamilNadu

நடிகை மீரா மிதுன் 2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார்.

ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட மோசடி சர்ச்சைகள் மற்றும் திருமணம் ஆனதை மறைத்தது உள்ளிட்ட தகவல்களால் அவருக்கு வழங்கப்பட்ட அழகி பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

சேரன் மீது குற்றச்சாட்டு

சேரன் மீது குற்றச்சாட்டு

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் தமிழக மக்களிடையே பெரும் பிரபலமானார். குறிப்பாக இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பிரளயத்தை ஏற்படுத்தினார்.

கமலையும் விட்டுவைக்கவில்லை

கமலையும் விட்டுவைக்கவில்லை

இதனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன். இருப்பினும் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது குற்றம்சாட்டிய மீரா மிதுன், விஜய் டிவி, நடிகர் கமல்ஹாசன் என யாரையும் விட்டு வைக்கவில்லை.

அடுத்த முதல்வர்

அடுத்த முதல்வர்

தொடர்ந்து தமிழ் சினிமாவையும் விளாசிய மீரா மிதுன் தான் பாலிவுட்டில் நடிக்கப்போவதாக கூறி மும்பை சென்றார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சனையை கிளப்பிய மீரா மிதுன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் தான்தான் என கூறி வருகிறார்.

முதல்வராக்குங்கள்

முதல்வராக்குங்கள்

மேலும் தமிழக அரசையும் அமைச்சர்களையும் விளாசி வருகிறார். எந்த பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடியிடம் புகார் அளிக்கும் மீரா மிதுன், தமிழக அரசை களைத்து விட்டு தன்னை முதல்வராக்குங்கள் என்று கூறி வருகிறார். தொடர்ந்து முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளையும் விளாசி வருகிறார்.

கெட்ட வார்த்தை

கெட்ட வார்த்தை

அந்த வகையில் அண்மையில் த்ரிஷாவை வம்பிழுத்தார் மீரா மிதுன். இதனால் கடுப்பான அவரது ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றினர். இந்நிலையில் தற்போது நடிகர்கள் ரஜினிகாந்தையும் விஜயையும் சீண்டியுள்ளார் மீரா மிதுன். மேலும் கெட்ட வார்த்தையும் பச்சையாக பேசியுள்ளார்.

அநீதி இழைக்கிறார்கள்

அநீதி இழைக்கிறார்கள்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தமிழகம் செத்துக்கொண்டிருக்கிறது. எல்லோரும் உங்களுடைய அதை பாதுகாத்து கொள்ளுங்கள். என்னுடைய அது, ஆடம்பரமான பாதுகாப்பான இடத்தில் சிறந்த வாழ்க்கையை வாழ்கிறது. ரஜினிகாந்த்(கர்நாடகா) விஜய்(கிறிஸ்டியன்) ஆகிய இருவரும் எனக்கு அநீதி இழைக்கிறார்கள்.

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

கழுவி ஊற்றும் ரசிகர்கள்

சைபர் புல்லிங்கில் பெண் துன்புறுத்தல் சட்டத்தை சட்டப்படி எடுக்க நான் தயங்க மாட்டேன்! கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்... என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மீரா மிதுனை வச்சு செய்துள்ளனர். குறிப்பாக ரஜினி ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் கழுவி ஊற்றியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X