கல்யாண பெண் கெட்டப்பில் கழுத்து நிறைய நகையுடன் மீண்டும் வந்த மீரா மிதுன்.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

சென்னை: நடிகை மீரா மிதுன் கழுத்து நிற நகையுடன் கல்யாண பெண் போல் மேக்கப்புடன் ஷேர் செய்திருக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர்.

Recommended Video

SORRY JESSIE | LOCKDOWN தாண்டி வருவாயா !! | MAHADHI TROLL | Filmibeat Tamil

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதுன். 2016 மிஸ் சவுத் இந்திய பட்டத்தை வென்றார் மீரா மிதுன்.

ஆனால் அதில் திருமணம் ஆன தகவலை மறைத்து பங்கேற்றது வயதை தவறாக கூறியது மற்றும் பணமோசடி புகார்களில் சிக்கியது உள்ளிட்ட காரணங்களால் அவருக்கு வழங்கப்பட்ட பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

பொய் குற்றச்சாட்டு

பொய் குற்றச்சாட்டு

தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கேயும் சக போட்டியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த மீரா மிதுன், இயக்குநர் சேரன் தன்னை தவறாக தொட்டதாக கூறி பொய்யான குற்றச்சாட்டை கூறினார்.

கவர்ச்சி

கவர்ச்சி

இதனால் கடுப்பான நெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சித்தனர். பின்னர் எப்படியாவது படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுவிட வேண்டும் என்று எண்ணிய நடிகை மீரா மிதுன் தன்பாட்டுக்கு கவர்ச்சி காட்டி மிரள விட்டார்.

நிர்வாணம்

நிர்வாணம்

எப்போதும் முன்னழகை காட்டி வாங்கிக்கட்டிய மீரா மிதுன், டாப்லெஸ், நிர்வாணம் என எல்லை மீறி கவர்ச்சி காட்டினார். அதோடு சமூக வலைதளங்களிலும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். கமல்ஹாசன் உட்பட சினிமா பிரபலங்கள் பலரையும் விளாசிய மீரா மிதுன் அரசியலையும் விட்டு வைக்கவில்லை.

அமைச்சர்

அமைச்சர்

தமிழக அரசு, முதல்வர், அமைச்சர்கள் என அனைவரையும் சாடினார். அடுத்த முதல்வர் தான்தான் என்று கூறிய மீரா மிதுன், டிவிட்டரில் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்தும் அவதூறாக பேசினார். பின்னர் அமைச்சரின் ஆட்கள் தன்னை மிரட்டுவதாகவும் டிவிட்டினார்.

கல்யாண பெண் போல்

கடைசியாக கடந்த 6ஆம் தேதி தனது போட்டோவை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் மீரா மிதுன். அதன் பிறகு சமூக வலைதள பக்கமே வரவில்லை மீரா மிதுன். இந்நிலையில் தனது இன்ஸ்டா மற்றும் டிவிட்டர் பக்கத்தில் தற்போது கல்யாண பெண் போன்ற கெட்டப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கழுத்து நிறைய நகை

சிவப்பு நிற பட்டு புடவையில் கழுத்து முழுக்க நகைகளுடன் செம மேக்கப்பில் உள்ளார் மீரா மிதுன். நெத்திச்சுட்டி, ஒட்டியானம் வளையல் என ஜொலிக்கிறார் மீரா மிதுன். அந்த வீடியோக்களை கல்யாண பாடல்கள் பேக்கிரவுண்டில் ஒலிக்க சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ளார்.

ரவிக்கைக்கான மரியாதை..

ரவிக்கைக்கான மரியாதை..

அவரது இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர். மீரா மிதுன் கழுத்து அகலாமான ஜாக்கெட்டை அணிந்திருப்பதை கவனித்த இந்த நெட்டிசன், ரவிக்கைக்கு உண்டான மரியாதையே வீண் ஆகி விட்டது என தனது கடுப்பை காட்டியிருக்கிறார்.

சந்திரமுகி..

சந்திரமுகி..

மற்றொரு நெட்டிசன் உனக்கெல்லாம் யாரு மாடல்னு அவார்ட கொடுத்தா என விளாசியிருக்கிறார். இன்னும் சில நெட்டிசன்கள் மீரா மிதுனின் இந்த வீடியோவை பார்த்து அய்யோ சந்திரமுகி பேய் என்று அலறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X