என்ன இது ஆஸ்கார் அவார்டு மாதிரி.. நிர்வாண போட்டோ போட்ட மீரா மிதுன்.. கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்
சென்னை: நடிகை மீரா மிதுன் உடம்பில் ஒட்டு துணியில்லாமல் நிர்வாணமாக போட்டோ வெளியிட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்திருக்கின்றனர்.
மாடலான மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். ஆனால் அதன் மூலம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் எப்படியாவது பட வாய்ப்புகளை பெற்று விடலாம் என எதிர்பார்த்தார்.

இனி ஒன்றும் இல்லை
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு எல்லாமே உல்டாவானது. இருந்த வாய்ப்புகளும் பறிபோனது. இதனை தொடர்ந்து கவர்ச்சி ஆயுதத்தை கையில் எடுத்தார். தொடர்ந்து எல்லை மீறி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் மீரா மிதுன். இதற்கு மேல் கவர்ச்சி காட்ட ஒன்றும் இல்லை என்ற ரீதியில் காட்டி வருகிறார்.
Also worthless jobless people are doing photoshoots! Lol i dont understand why?! 🤪🖕 pic.twitter.com/yQVrlQrzha — Meera Mitun (@meera_mitun) February 28, 2020 '>
ஒட்டுத் துணியில்லாமல்
அதோடு மட்டுமில்லாமல் தன்னைப் பார்த்துதான் கோலிவுட் முதல் பாலிவுட் வரை அனைத்து நடிகைகளும் காப்பியடித்து போட்டோ ஷுட் நடத்துவதாக தெரிவித்து வருகின்றார். எவ்வளவு சொல்லியும் கேட்காத மீரா மிதுன் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் நிர்வாண கோலத்தில் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார்.

கை கால்களை மறைத்து
நகைக்கடை விளம்பரத்துக்காக உடம்பில் பிட்டுத் துணியில்லாமல் கறுப்பு நிற மையை பூசி மேக்கப் போட்டிருக்கிறார் மீரா மிதுன். ஆனாலும் எதுவும் வெளியில் தெரியாதப்படி கால்களையும் கைகளையும் மடித்து வைத்து மறைத்துள்ளார். இந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எனக்கு புரியவில்லை
மேலும் ஃபோட்டோஷூட்டுக்கள் பிராண்டுகள், வார இதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் பிரபல சூப்பர்மாடல்களால் செய்யப்படுகிறது. மாடல்களாக அல்லாதவர்கள் ஏன் ஃபோட்டோஷூட் செய்து ஏன் இந்திய பேஷன் காட்சியை மிகக் குறைக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.
பயனற்றவர்களும் வேலையற்றவர்களும் ஃபோட்டோஷூட் செய்கிறார்கள் ஏன் என்று எனக்கு புரியவில்லை ?! இவ்வாறு தனது போட்டோவுக்கு கேப்ஷன் மீரா மிதுன் கொடுத்துள்ளார்.
ஆஸ்கர் அவார்டு
அவரது போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி தள்ளியிருக்கின்றனர். மீரா மிதுனின் இந்த நிர்வாண போட்டோ ஷுட்டை பார்த்த இந்த நெட்டிசன், என்ன இது ஆஸ்கார் அவார்டு உக்காந்து இருக்கு மாதிரி இருக்கு என மரண பங்கமாய் கலாய்த்திருக்கிறார். ஆனால் மற்றொரு நெட்டிசனான இவர் செம்ம என புகழ்ந்திருக்கிறார்.
ஏன் வயித்தெரிச்சல்
மீரா மிதுனின் கேப்ஷனை பார்த்த இந்த நெட்டிசன்,இப்போ நீங்க கதாநாயகி, எந்த ஆணோட சுண்டு விரல் கூட எம்மேல பட்டதில்ல, கண்ணகி பக்கத்து வீடுனு நீங்க புரூடா விட்றீங்களே அது மாதிரிதான். ஒவ்வொருதருக்கும் ஒரு ஆசை. உங்களுக்கேன் வயித்தெரிச்சல்? என நறுக்கென கேட்டிருக்கிறார். அதேநேரத்தில் இந்த நெட்டிசன், மேக்கப் இல்லாத போட்டோவ ரிலீஸ் பண்ணிட்டீங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
அரிய வகை விலங்கு
மீரா மிதுனின் கேப்ஷனை பார்த்த இந்த நெட்டிசன், ஏன் உங்களுக்கு பொறாமை போட்டோ ஷுட்டில் அவர்கள் உங்களை விட அழகாக இருக்கிறார்கள் அதனால்தானே என்று கேட்டிருக்கிறார். மீரா மிதுனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன், அரிய வகை விலங்கு என கமென்ட் அடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











