ரொம்ப வேடிக்கையா இருக்கு.. பாலிவுட் பத்தி கோலிவுட் பேசுது.. 'நாஸ்டி ப்ளேஸ்' வெளுத்து வாங்கிய நடிகை!
சென்னை: சுஷாந்த் மரணம் குறித்து கோலிவுட் பேசுவது வேடிக்கையாக உள்ளது என பிரபல நடிகை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை மீரா மிதுன். தமிழ் சினிமா, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் என யாரையும் விட்டு வைப்பதில்லை.
தான் ஒப்பந்தம் செய்யப்பட்ட படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டதால் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் விளாசி தள்ளினார். தமிழ் சினிமா சில குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ளதாக கூறினார்.

கிளாமர் போட்டோ
மேலும் தன்னுடைய திறமைக்கு ஏற்ற இடம் பாலிவுட்தான் என்று கூறி மும்பை சென்றார். பின்னர் மீண்டும் சென்னைக்கே வந்த அவர் தனது அரைகுறை போட்டோக்களை ஷேர் செய்து வாய்ப்பு தேடி வருகிறார். கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டியும் வருகிறார்.

சுஷாந்த் மரணம்
அரசியல் ஆசை கொண்டுள்ள மீரா மிதுன், 2021 ஆம் ஆண்டு தான் முதல்வர் ஆவது உறுதி என கூறி வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து கோலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருவதோடு பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியலுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ரொம்ப நாஸ்டியான இடம்
இந்நிலையில் இதுகுறித்து நடிகை மீரா மிதுன் டிவிட்டரில் கருத்து கூறியுள்ளார். அதில் பாலிவுட்டை பற்றி கோலிவுட் பேசுவது வேடிக்கையாக உள்ளது.. உண்மையில் கோலிவுட் ரொம்ப நாஸ்டியான இடம்.. வேண்டியவர்களுக்கு சலுகை அளிப்பது, படுக்கையில் சமரசம் செய்வது, என்னைப் போன்ற ஒரு சக்திவாய்ந்த பெண் சாதனையாளரை ஏற்றுக்கொள்ள முடியாத ஆண் பேரினவாத ஆதிக்கம், சொல்லப்படாத துன்பங்களுக்குள் என்னை தள்ளி, உண்மையை மறைக்கப்படுகிறது.. என விளாசியிருக்கிறார்.

இதுதான் வேடிக்கை
ஆனால் அவரது இந்த டிவிட்டையும் விட்டு வைக்கவில்லை நெட்டிசன்ஸ். இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் இதை படிக்கத்தான் வேடிக்கையாக உள்ளது. இதுபோன்ற வேடிக்கையான டிவிட்டுகளுக்காகதான் உங்களை ஃபாலோ செய்கிறேன், இன்றைய என்னுடைய நாளை உருவாக்கியதற்கு நன்றி என்று கூறி கலாய்த்துள்ளனர்.

என்ன சரக்கு?
இன்னும் சில நெட்டிசன்கள் பவர்ஃபுல் அச்சீவரா யாரு இது என கேட்டு பங்கம் செய்துள்ளனர். சிலர் என்ன சரக்கு அடிக்கிறீர்கள் இப்படி நின்னு பேசுது.. ரகசியத்தை சொல்லுங்க என மரண கலாய் கலாய்த்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் உங்களை ஃபோலோ செய்வதே இதை இது போன்ற டிவிட்டுகளை பார்த்து சிரிக்கத்தான் என கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











