For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான் நடித்த காட்சிகளை எப்படி நீக்கலாம்.. நம்ம வீட்டுப்பிள்ளை படக்குழு மீது பாய்ந்த மீரா மிதுன்!

|
Bigg Boss 3 Tamil : We Are the boy-uh Gang Special Performance

சென்னை: நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கு நடிகை மீரா மிதுன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகை மீரா மிதுன் 2016 மிஸ் தென்னிந்திய அழகி பட்டத்தை வென்றார். திருமணம் ஆனதை மறைத்துவிட்டு அழகி போட்டியில் பங்கேற்றது, வயது குறித்து தவறான தகவல் அளித்தது மற்றும் அவர் மீதான மோசடி புகார்களால் அழகி பட்டம் திரும்பப்பெறப்பட்டது.

இந்நிலையில் விஜய் டிவியில் அண்மையில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டார். இதில் எல்லோருடனும் நான் சிங்கிள் என்ற மீரா, சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான நோக்கத்தில் தொட்டு தூக்கியதாக அபாண்ட குற்றச்சாட்டை கூறினார்.

நம்ம 'புள்ளிங்கோ' எல்லாம் பயங்கரம்.. ரம்யா பாண்டியன் வெளியிட்ட அடுத்த அதிரடி போட்டோ.. ரசிகர்கள் ஷாக்

நம்ம வீட்டுப்பிள்ளை படம்

நம்ம வீட்டுப்பிள்ளை படம்

இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்த மீரா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனுடன் நம்மவீட்டுப்பிள்ளை படத்தில் நடித்து வருவதாக கூறினார்.

கடுப்பான மீரா மிதுன்

கடுப்பான மீரா மிதுன்

இந்நிலையில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்தில் அவர் நடித்திருந்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதனால் கடுப்பான மீரா மிதுன் டிவிட்டரில் கொந்தளித்துள்ளார்.

விஜய் டிவிக்கு போனதால்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காக 10 நாட்கள் கடுமையான வெயிலில் கடிகாரம் போல சுழன்று வேலை பார்த்தேன். ஜிகிரி தோஸ்து என்ற பாடலும் காட்சியாக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியே வந்த பிறகு சன்பிக்ஸர்ஸும் இயக்குநர் பாண்டிராஜும், என் தொடர்பான காட்சிகளை நீக்குவதாக கூறினர். ஏனெனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க நான் விஜய் டிவிக்கு சென்றதால் என பதிவிட்டுள்ளார்.

ஆரோக்கியமான போட்டியில்லை

மற்றொரு டிவிட்டில், கோலிவுட்டில் ஆரோக்கியமான போட்டியில்லாதது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. நான் நினைக்கிறேன் சிவகார்த்திகேயன் கூட விஜய் டிவியில் இருந்து வந்தவர்தான் என்று. திரைப்படங்கள் மற்றும் நடிகர்களின் தரத்தை மேம்படுத்த முதலில் கோலிவுட்டில் தொழில் முறை கலாச்சாரத்தை பெறுங்கள், என தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.

ஹீரோக்களுக்கு பிரச்சனை

மேலும் பிரியங்கா சோப்ரா ஏன் கோலிவுட் பக்கமே திரும்புவதில்லை என்றும் எனக்கு இப்போதுதான் புரிகிறது. இங்குள்ள மக்கள் ஒரு பிரபலமான திறமையான பெண்ணுடன் ஜோடி சேர்ந்து நடிப்பதில் ஆண் பேரினவாத அணுகுமுறை மற்றும் தாழ்வு மனப்பான்மை ஒரு சிக்கலாக உள்ளது. குறிப்பாக ஹீரோக்கள் புகழ்பெற்ற ஒரு பெண்ணுடன் ஜோடி சேர முடியாது! கோலிவுட் இன்னும் வளரனும். இவ்வாறு நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Meera mithun slams Namma Veetu pillai movie team for removing her scenes in the film after she participated in Biggboss season 3. She has slamed in tweeter.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more