கோலிவுட் புறக்கணித்ததால்தான் பாலிவுட் - ஹாலிவுட் என இருக்கிறேன்.. அளந்துவிடும் பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: தன்னை கோலிவுட் புறக்கணித்ததால்தான் தற்போது பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என இருப்பதாக நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
நடிகை மீரா மிதுன் தானா சேர்ந்த கூட்டம், எட்டு தோட்டாக்கள் ஆகிய படங்களில் சிறு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

சர்ச்சையில் சிக்கி
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன் அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வாங்கிக்கட்டி வருகிறார். அதோடு ஏதாவது ஒன்றை பேசியும் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

காப்பியடிக்கிறார்கள்
என்ன பிரச்சனை என்றாலும் பிரதமர் மோடியிடம் புகார் அளிப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். அதோடு சினிமா நட்சத்திரங்கள் ஏதாவது ஒரு போட்டோவை ஷேர் செய்தால் போதும் அது தன்னை பார்த்து அடித்த காப்பிதான் என வரிந்துக் கட்டிக்கொண்டு வருகிறார்.

த்ரிஷாவுக்கு எச்சரிக்கை
அந்த வகையில் பாலிவுட் நடிகைகள், கோலிவுட் நடிகைகள் மற்றும் நடிகர்கள் என யாரையும் விட்டு வைப்பதில்லை மீரா மிதுன். சமீபத்தில் நடிகை த்ரிஷா ஷேர் செய்த போட்டோவை பார்த்து தன்னை காப்பியடிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும் இதுவே கடைசியாக இருக்க வேண்டும் என எச்சரித்திருந்தார்.
நேஷனல் இன்டர்நேஷனல்
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் பதிவு நெட்டிசன்களை காண்டாக்கியிருக்கிறது. அவர் பதிவிட்டிருப்பதாவது, தமிழகம் என்னை புறக்கணித்தது, அதற்கு ரொம்பவே நன்றி அதனால்தான் இன்று நான் நேஷனல் அளவிலும் இன்டர்நேஷனல் அளவிலும் சூப்பர் மாடலாக இருக்கிறேன்.

வேலையே இல்லையா?
மேலும் கோலிவுட் முழுக்க எனக்கு எதிராக இருந்தது. அதனால்தான் பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் இருக்கிறேன். ஆனால தமிழகம் ஏன் என்னைப் பற்றி பேசுகிறது என்று எனக்கு புரியவில்லை. ஏன் என் பின்னாலேயே இருக்கிறார்கள்? அவர்களுக்கு வேலையே இல்லையா? என கேட்டுள்ளார்.
புண்ணியமாய் போகும்
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர். மீரா மிதுனின் அந்தப் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், தயவு செஞ்சு பொட்டி படுக்கையெல்லாம் எடுத்துட்டு சென்னையை காலி பண்ணு ஆத்தா உனக்கு புண்ணியமாப் போகும்!! என பதிவிட்டுள்ளார்.
தூக்கி அடிச்சுறுவேன்
மற்றொரு நெட்டிசனான இவர் என்னம்மா உனக்கு வேற வேலை இல்லையா? தூக்கி அடிச்சுறுவேன் பாத்துக்க.. என விஜயகாந்த் ஸ்டைலில கூறி அவரது வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
Recommended Video
என்னது ஹாலிவுட்டா?
மற்றொரு நெட்டிசனான இவர் என்னது ஹாலிவுட்டா? உனக்கு மனசாட்சியே இல்லையாம்மா? இப்படி உங்க இஷ்டத்துக்கு புளுகுறீங்களே.. என விளாசியிருக்கிறார். மற்றொரு நெட்டிசன், காரக்குடி பார்டீல கூப்டாக தஞ்சாவூர் பார்டீல கூப்டாக இவ்வளவு ஏன்.. அமெரிக்கா மைக்கேல் ஜாக்சன் கூப்டாக சைனா ஜாக்கிசான் கூப்டாக.. என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











