twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மொத்தத்தையும் இழுத்து மூடப்போறேன்.. சிம்கார்டு நிறுவனத்தையும் விடாத மீரா மிதுன்.. மோடியிடமும் புகார்

    |

    சென்னை: மொத்த பிராண்டையும் இழுத்து மூடப் போவதாக பிரபல சிம்கார்டு நிறுவனத்தை மிரட்டியிருக்கிறார் நடிகை மீரா மிதுன்.

    Recommended Video

    Sri Reddy Buttonless shirt Lock Down Glamours | Meera mithun | Kiran Rathore

    நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். 2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் பிரபலமானார் நடிகை மீரா மிதுன்.

    ஆனால் திருமணம் ஆனதை மறைத்து அழகிப் போட்டியில் பங்கேற்றதாகவும் வயது குறித்தும் பொய்யான தகவலை அளித்ததாகவும் அவருக்கு வழங்கப்பட்ட அழகிப்பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

    ஜோடி நம்பர் ஒன்

    ஜோடி நம்பர் ஒன்

    முன்னதாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், தன்னுடன் ஆடிய பார்ட்னர் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி நிகழ்ச்சியிலேயே பரபரப்பை கிளப்பினார். இதன் மூலம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் மீரா மிதுன்.

    சேரன் மீது புகார்

    சேரன் மீது புகார்

    தொடர்ந்து பண மோசடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கினார் மீரா மிதுன். தொடர்ந்து பெயர் டேமேஜானதால் பெயரைக் காப்பாற்றிக்கொள்ள விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் பங்கேற்றார். ஆனால் அதிலும் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார், இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டார் என பிரளயத்தை கிளப்பினார்.

    பெரும் பரபரப்பு

    பெரும் பரபரப்பு

    அதோடு நிறுத்தாத மீரா மிதுன், சேரனின் பெயரை சமூக வலைதளங்களில் டேமெஜ் செய்ய கூறியது, தொழிலதிபர் ஜோ மைக்கெல்லை கொலை செய்யக் கூறியது உள்ளிட்ட ஆடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து போலீசார், தமிழ் சினிமா என மொத்ததையும் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டு வந்தார்.

    சிம்கார்டு நிறுவனம்

    சிம்கார்டு நிறுவனம்

    தமிழக அரசு, முதல்வர், இயக்குநர் சேரன், நடிகர் கமல்ஹாசன், தமிழ் சினிமா இயக்குநர்கள் என பலரையும் விமர்சித்தார் மீரா மிதுன். இந்நிலையில் பிரபல சிம்கார்டு நிறுவனமான வோடாஃபோன் நிறுவனத்தையும் வம்பிழுத்திருக்கிறார் நடிகை மீரா மிதுன்.

    மோடி என்ன செய்கிறார்

    இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் வோடாஃபோன் நிறுவனம், நீங்கள் என் போன் கனெக்ஷனுக்கு செய்யும் வேலைக்காக விரைவில் அறுவடை செய்யப் போகிறீர்கள். நான் உங்களை பார்த்து பரிதாபப்படுகிறேன். ஏனென்றால் விரைவில் உங்கள் மொத்த பிராண்டையும் இழுத்து மூடப் போகிறேன். வெட்கம் கெட்ட வோடாஃபோன். ஒரு பெண் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டிருக்கும் போது யாருமே எந்த ஆக்ஷனும் எடுக்காதபோது மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார்.. என பதிவிட்டுள்ளார்.

    அதுக்குள்ளேயே இவ்ளோவா?

    வோடாஃபோன் நிறுவனம் கடைசி மூன்று மாதங்களாக என்னுடைய மொபைல் டேட்டா கடைசி இரண்டு மாதங்களாக வேலை செய்யவில்லை. என்னுடைய இன்கம்மிங் கால்ஸ் கட்டாகியுள்ளது. நான் முழுமையாக ரீசார்ஜ் செய்திருக்கிறேன். ஆனாலும் என்னால் கால் செய்ய முடியவில்லை. சீரியஸா இப்போ அந்த முதல்வன் அர்ஜுன் மொமென்ட்.. நா இன்னும் அரசியலுக்கே வரலயே.. அதுக்குள்ளேயே இவ்ளோவா.. என பதிவிட்டுள்ளார்.

    மனநிலை சரியா

    தனது புகாரை பிரதமர் மோடியின் டிவிட்டர் ஹேன்டிலுக்கும் டேக் செய்துள்ளார் மீரா மிதுன். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி உள்ளனர். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த இவர், தயவு செஞ்சு இத புடிச்சி இதோடு மனநிலை சரியாதான் இருக்கானு ஒரு தடவை சோதித்துப் பார்க்கவும் என தெரிவித்துள்ளார்.

    உன்ன ஃபாலோ பண்றேன்

    மீரா மிதுனின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன், பைத்தியக்காரி, எல்லாம் மோடிக்கிட்டதான் மேடம் கம்ப்ளையன்ட் பண்ணுவாங்க என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். ஏதோ நீ அப்பப்ப ஒரு பிட்டு சீன் ரிலீஸ் பண்றன்னு உன்ன ஃபாலோ பண்றேன், ஆனா உன் தொல்ல தாங்கல. என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

    யாரும் தடுக்க முடியாது

    மற்றொரு நெட்டிசனான இவர், அய்யோ அவரு வேற இது தெரியாம கொரோனா பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்றாரே... அய்யா மோடி ஜி என்னான்னு பாருங்க... முடிஞ்சா நீங்களே ரீசார்ஜ் பண்ணி விட்ருங்க... இல்லனா அக்கா பிரதமர் ஆகிறத யாரும் தடுக்க முடியாது... என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

    மீராவுக்கு பதில் இல்லை

    மீராவுக்கு பதில் இல்லை

    மீரா மிதுன் வோடாஃபோன் நிறுவனம் குறித்த தனது இந்த புகாரை, அந்நிறுவனத்தின் டிவிட்டர் ஹேன்டிலை டேக் செய்திருந்தார். ஆனால் வோடாஃபோன் நிறுவனமோ கடைசி வரை மீரா மிதுனுக்கு பதில் அளிக்காமல் அவரை கழுவி ஊற்றியவர்களுக்கு பதிலளித்துள்ளது.

    English summary
    Actress Meera mithun slams Vodafone and she is complaining to PM Modi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X