அவர் போருக்கு தயாராகிவிட்டார்.. கவரச்சி உடையில் ரஜினிகாந்துக்கு ஆதரவு தெரிவித்த சர்ச்சை நடிகை!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக நடிகை மீரா மிதுன் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகை மீரா மிதுன் என்றாலே ஒன்று சர்ச்சை அல்லது கவர்ச்சி என்றாகிவிட்டது. அவ்வப்போது அரசு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசிவிட்டு பிரச்சனையில் சிக்குவார்.
மேலும் அரசியல் பேசியும் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக்கொள்வார் மீரா மிதுன். இந்நிலையில் இன்று ரஜிகாந்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கிறார் நடிகை மீரா மிதுன்.

திட்டவட்ட அறிவிப்பு
அதாவது நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் இன்று திட்டவட்டமாக அறிவித்தார்.

உலகளவில் ட்ரென்ட்டிங்
தான் பேசியதற்கான ஆதாரங்களையும் காட்டினார் ரஜினிகாந்த். இதனை தொடர்ந்து மன்னிப்பு கேட்க முடியாது என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் உலகளவில் ட்ரென்ட்டாகி வருகிறது.

ஒரு நல்ல மனிதர்
அதே ஹேஷ்டேக்கை பயன்படுத்தி நடிகை மீரா மிதுன் நடிகர் ரஜினிகாந்துக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அவர் எப்போதுமே ஒரு நல்ல மனிதர், அனைவருக்கும் அப்படியே தொடர்ந்து இருக்கிறார்.

போருக்கு தயார்
ஆனால் அவரைச் சுற்றியுள்ள முதலைகளை தாண்டி அவரால் வர முடியுமா என நான் அஞ்சினேன், இன்று அவர் போருக்குத் தயாராக உள்ளார் என்பதை தெளிவுபடுத்திவிட்டார் என தெரிவித்துள்ளார்.
போஸ்டர் பக்கத்தில்..
மேலும் ரஜினிகாந்த்தின் போஸ்டருக்கு அருகில் கிளாமரான உடையில் நின்றபடி எடுத்த போட்டோவையும் மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார்.
துக்ளக் வாசகரா அக்காவ்
மீரா மிதுனின் இந்த டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், துக்ளக் வாசகரா அக்காவ் என கேட்டு நக்கலடித்துள்ளார்.
என்னடா சோதனை
என்னடா ரஜினிக்கு வந்த சோதனை என்று கேட்டிருக்கிறார் இவர்.
ரஜினி போருக்குத் தயாராவது இருக்கட்டும்.. மீரா மிதுனின் அக்கப்போர்களுக்கு என்று முடிவு என்று மக்களின் மைன்ட் வாய்ஸ் கடுப்பாக ஒலித்துக் கொ ண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











