உங்களுக்கு தகுதியே இல்லை.. இந்த வருஷம் நீங்க பிக்பாஸ் நடத்த முடியாது.. கமலை மிரட்டும் நடிகை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த நடிகர் கமல்ஹாசனுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லை என்றும் இந்த ஆண்டு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது என்றும் சவால் விட்டுள்ளார் சர்ச்சையான நடிகையான மீரா மிதுன்.

மீரா மிதுன் என்றாலே சர்ச்சை, பிரச்சனை, வம்பு தும்பு என்றாகிவிட்டது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள மீரா மிதுன் எப்போதும் தனது கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்வதற்கும் அடுத்தவர் பற்றி குறை கூறுவதற்கு மட்டுமே அதனை பயன்படுத்தி வருகிறார்.

எவ்வளவுதான் ரசிகர்கள் கழுவி ஊற்றினாலும் கொஞ்சமும் கவலைப்படாமல், யார் என்ன என்று எதையும் பார்க்காமல் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசி வருகிறார்.

சேரன் மீது புகார்

சேரன் மீது புகார்

கடந்த ஆண்டு ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் எதிரொலியாக ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

கோலிவுட் மாஃபியா

கோலிவுட் மாஃபியா

அதிலிருந்தே நடிகர் கமல்ஹாசனையும் அவரது குடும்பத்தையும் உண்டு இல்லை என செய்து வருகிறார் நடிகை மீரா மிதுன். அக்னி சிறகுகள் படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமான நிலையில் அந்த வாய்ப்பை கமல்ஹாசன் தலையிட்டு தனது மகளுக்கு பெற்று தந்ததாக குற்றம்சாட்டினார். கமலை கோலிவுட் மாஃபியா என்றும் கூறி வருகிறார்.

அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

இந்நிலையில் நடிகை மீரா மிதுன் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் கமல்ஹாசன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். அவர் பேசியிருப்பதாவது, கல்யாண வீட்ல சீப்ப ஒளிச்சு வச்சுட்டா கல்யாண நின்னு போயிடும்னு நினைக்கிற மாதிரி என்னோட ஒரு வீடியோவ மறைச்சுட்டா என் கேரியரே போயிடும்னு மிஸ்டர் கமல்ஹாசன் தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கிறார்.

தவறான ஜட்ஜ்மென்ட்

தவறான ஜட்ஜ்மென்ட்

நீங்கள் இதே மாதிரி பண்ணினால் உங்கள் மீது நான் நடவடிக்கை எடுப்பேன். கடந்த ஆண்டு நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு தவறான ஜட்ஜ்மென்டை கொடுத்துவிட்டீர்கள். ஒரு பெண்ணை மேன் ஹேண்ட்லிங் செய்த நபருக்கு ஆதரவாய் இருந்து விட்டீற்கள். என் பெண்மையை இழந்தீர்கள், என்னை அவமானப்படுத்தி விட்டீர்கள்.

நீங்கள் தகுதியில்லாதவர்

நீங்கள் தகுதியில்லாதவர்

என்னை நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேற்றினீர்கள். எந்த காரணத்திற்காக வேண்டுமானாலும் நீங்கள் என்னை அனுப்பியிருக்கலாம். ஆனால் இதற்காக நீங்கள் என்னை அனுப்பியிருக்க கூடாது. அதற்காக இந்தியா டுடே கூட உங்களை கழுவி கழுவி ஊற்றினார்கள். நீங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த அன்ஃபிட்டானவர் மிஸ்டர் கமல்ஹாசன்.

நானும் விளையாடுவேன்

நானும் விளையாடுவேன்

நீங்கள் என் முதுகை சொரிந்தால் நானும் செய்வேன். நீங்கள் என் கேரியரில் விளையாடினால் நானும் உங்கள் கேரியரில் விளையாடுவேன். நான் உங்கள் மீது கேஸ் போடுவேன், இந்த வருஷம் உங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தவே முடியாது. நீங்கள் இப்படிதான் டரட்டியாக விளையாட வேண்டும் என நினைத்தால் எனக்கும் விளையாட தெரியும்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Latest Update • Contestant List
இனிமேல் வேலைக்காகாது

இனிமேல் வேலைக்காகாது

ஆனால் நான் நல்லவளாக இருக்க விரும்பினேன். ஆனால் அதெல்லாம் இனிமேல் வேலைக்காகாது என தெரிந்துகொண்டேன். என் ஃபுட்டேஜ் என் கைக்கு வரும் வரை, ட்ரென்ட் லவுடோட எந்த ஷுட்டிங்கும் நடக்காது. நான் ஸ்டே வாங்க போகிறேன். என் வேலையை நிறுத்த நினைத்தால் நானும் உங்கள் வேலையை நிறுத்தி விடுவேன்.

பிக்பாஸ் நடத்த முடியாது

பிக்பாஸ் நடத்த முடியாது

நான் உங்கள் மீது வழக்கு தொடருவேன், பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் நீங்கள் செய்தது தவறு. உங்களால் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது. நீங்கள் இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த முடியாது.. இவ்வாறு ஆக்ரோஷமாக பேசியுள்ளார் மீரா மிதுன்.

கமலும் உடந்தை

கமலும் உடந்தை

மீரா மிதுனை வைத்து டான்ஸ் ஆல்பம் ஒன்றை தயார் செய்த ஏஜென்சி நிறுவனம் அந்த வீடியோவை அவரிடம் இதுவரை கொடுக்கவில்லையாம். அந்த நிறுவனம், நடிகை அக்ஷரா ஹாசனை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாம் அதற்காகதான் தன்னுடைய வீடியோவை கொடுக்க மறுக்கிறார்கள், இதற்கு கமலும் உடந்தை என்று கூறுகிறார் மீரா மிதுன்.

திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்

கமலை கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டுள்ள மீரா மிதுனை நெட்டிசன்கள் துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர். எப்போதும் யாரையாவது குறை சொல்வதும் சண்டை போடுவதும் தான் உங்கள் வேலையா என்றும் கேட்டு வருகின்றனர். மேலும் நல்ல மருத்துவரை விரைவில் போய் பாருங்கள் என்றும் மீரா மிதுனுக்கு அட்வைஸ் கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X