இதுதான் உனக்கு கடைசி வார்னிங்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.. த்ரிஷாவை மிரட்டும் நடிகை!

சென்னை: சர்ச்சை நடிகையான மீரா மிதுன், நடிகை த்ரிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Trisha வை கிழித்த மீரா • Don't Copy Me #OneAndOnlySuoermodelOfIndia

மீரா மிதுன் என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வாங்கிக் கட்டி வருகிறார் மிரா மிதுன்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை உள்ள ஹீரோயின்கள் தன்னை காப்பியடிக்கிறார்கள் என புலம்பி வந்தார். பிரபல நடிகைகள் என பலரையும் சாடினார்.

த்ரிஷா மீது பாய்ச்சல்

த்ரிஷா மீது பாய்ச்சல்

மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தபோது கூட நடிகர் விஜய் தன்னை காப்பியடிக்கிறார் என கிளப்பிவிட்டார். அவரது பதிவுகளை பார்த்து நெட்டிசன்கள் என்னதான் திட்டி தீர்த்தாலும் அதைப்பற்றி கவலைப் படுவதில்லை மீரா மிதுன். இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் மீது பாய்ந்துள்ளார் நடிகை மீரா மிதுன்.

கடைசி வார்னிங்

கடைசி வார்னிங்

நடிகை த்ரிஷா, ஹேர் ஸ்டைல் முதல் அனைத்திலும் தன்னை காப்பியடிப்பதாக சாடியிருக்கிறார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், உங்களுக்கு இதுதான் என்னுடைய கடைசி எச்சரிக்கை என த்ரிஷாவின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார்.

கடும் நடவடிக்கை

கடும் நடவடிக்கை

மேலும் அடுத்த முறை நான் பார்க்கும்போது, முடி, மார்பிங், என்னைப் போல தோற்றமளிக்கும் என்னுடைய அம்சங்களுடன் உங்கள் போட்டோவை நீங்கள் ஃபோட்டோஷாப் செய்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்.

மனசாட்சிக்கு தெரியும்

மனசாட்சிக்கு தெரியும்

நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்களுக்கு தெரியும், உங்கள் மனசாட்சிக்கு தெரியும். வளருங்கள்! வாழ்க்கையைப் பெறுங்கள்.. என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா கடந்த மாதம் சமூக வலைதளங்களில் இருந்து விலகினார்.

த்ரிஷா செல்பி

த்ரிஷா செல்பி

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் செல்பியுடன் சமூக வலைதளங்களில் ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். அந்த செல்பியில் உடம்பில் கிளிட்டர்ஸ் இருப்பது கிளிட்டர்ஸ் இருப்பது போன்ற போட்டோ ஷாப் செய்திருக்கிறார். இதனை பார்த்துதான் பொங்கியிருக்கிறார் மீரா மிதுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X