2 விவாகரத்து.. மூன்றாவதாக ஒளிப்பதிவாளரை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!

சென்னை: ஜெர்ரி, அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை மீரா வாசுதேவன் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களின் திருமண புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மீரா வாசுதேவன்: மகாராஷ்டிர மாநிலம் மும்பையை பூர்வீகமாக கொண்டவர் தான் நடிகை மீரா வாசுதேவன். இவருக்கு கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் இருந்ததால், அதில் நுழைந்து, ஐ.சி.சி செட்மேக்ஸ் விளம்பரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார். விவாகரத்துக்கு பின் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திய இவருக்கு, தெலுங்கில் அஞ்சலி ஐ லவ் யூ படத்திலும், தன்மாத்ரா, தசையினை தீ சுடின், கத்திக்கப்பல் என்ற மலையாளப் படத்திரத்திலும் நடித்தார். தமிழில் இவர், ஜெர்ரி, குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, அடங்க மறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Actress Meera vasudevan 3rd marriage with cinematographer vipin puthiyankam

இரண்டு விவாகரத்து: இதைத் தொடர்ந்து சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த மீரா வாசுதேவன், அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலை திருமணம் செய்துகொண்டார். ஆனால் சில ஆண்டுகளிலேயே இவர்கள் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதைத் தொடர்ந்து, வில்லன் நடிகர் ஜான் கொகேனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த வாழ்க்கையும் சில பிரச்சனையால் முறிந்துப்போனது. சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமான ஜான் கொகேன், நடிகை பூஜை ராமச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதிகளுக்கு அண்மையில் ஒரு குழந்தை பிறந்தது.

3வது திருமணம்: சினிமாவில் மட்டுமில்லாமல், தமிழில் சூரிய வம்சம், சித்தி 2, காவேரி ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது ஏசியாநெட் மலையாள சேனலில் ஒளிபரப்பப்பட்டு வரும் குடும்பவிளக்கில் நடித்து வரும் மீரா வாசுதேவன், மூன்றாவதாக விபின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மே 21ந் தேதி நடைபெற்ற இந்த திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். ஒளிப்பதிவாளராக விபினுடன் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறி தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில்,பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X