நீண்டநாள் காதலரை மணந்த மேகா ஆகாஷ்.. க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு உற்சாகம்!
சென்னை: நடிகை மேகா ஆகாஷ் ரஜினிகாந்த், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில்தான் இவர் தன்னுடைய என்ட்ரியை கொடுத்த நிலையில் தமிழில் முதல் படத்திலேயே ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து மேகா ஆகாஷ் நடித்திருந்த மழை பிடிக்காத மனிதன் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாய் விஷ்ணு என்பவருடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த ஜோடிக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை மேகா ஆகாஷ்: நடிகை மேகா ஆகாஷ் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். தொடர்ந்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், தனுஷுடன் எனை நோக்கி பாயும் தோட்டா, சந்தானத்துடன் வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில்தான் சினிமாவில் இவரது முதல் என்ட்ரி அமைந்தது. இந்நிலையில் விஜய் ஆண்டனியுடன் மேகா ஆகாஷ் ஜோடி சேர்ந்து நடித்திருந்த மழை பிடிக்காத மனிதன் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் சாய் விஷ்ணுவுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை புகைப்படங்களுடன் தெரிவித்திருந்தார் மேகா.

மேகா ஆகாஷ் -சாய் விஷ்ணு திருமணம்: இந்நிலையில் இன்றைய தினம் மேகா ஆகாஷ் -சாய் விஷ்ணுவின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் மேகா ஆகாஷ். க்யூட்டான இந்த ஜோடி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளப்பக்கத்தில் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் இவர்களின் ரிஷப்ஷனும் நடந்து முடிந்துள்ளது.

சென்னையில் திருமணம்: முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் மகன் சாய் விஷ்ணுவைத்தான் மேகா ஆகாஷ் திருமணம் செய்துள்ளார். இவர்களது திருமணம் இன்றைய தினம் சென்னை திருவான்மியூரில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் நடந்துள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற இவர்களின் ரிஷப்ஷன் நிகழ்ச்சியில் முதலமைச்சர் முக ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டனர். இதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளன.

6 ஆண்டு காதல்: சாய் விஷ்ணு பிகாம் பட்டதாரி மற்றும் நியூயார்க்கில் பிலிம் மேக்கிங் படித்துவிட்டு இயக்குநர் பா ரஞ்சித்திடம் காலா, கபாலி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இந்நிலையில் மேகா ஆகாஷ் -சாய் விஷ்ணு இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











