இரட்டை குழந்தைகளைப் பெற்றாரா..? வேகமாக பரவிய செய்தி.. அவசரமாக மறுத்த பிரபல நடிகை!
பெங்களூரு: தான் இரட்டைக் குழந்தைகளை பெற்றதாக வந்த தகவல்களை பிரபல நடிகை மறுத்துள்ளார்.
தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நடித்தவர் மேக்னாராஜ்,
மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், நடிகர் சுந்தர்ராஜ், நடிகை பிரமிளா ஆகியோரின் மகள்.

சிரஞ்சீவி சார்ஜா
இவர் கன்னட நடிகரும் நடிகர் அர்ஜூனின் மருமகனுமான சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன், சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் திடீரென மரணமடைந்தார். இது சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.

நான்கு மாத கர்ப்பம்
சிரஞ்சீவி சார்ஜா மறைந்தபோது நடிகை மேக்னா ராஜ், நான்கு மாத கர்ப்பமாக இருந்தார். அவர் மறைவை அடுத்து மேக்னா வெளியிட்டிருந்த உருக்கமானப் பதிவில், 'நம் காதலின் அடையாளமாக விலைமதிக்க முடியாத பரிசை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். அது நம் குழந்தை' என்று கூறியிருந்தார்.

இரட்டை குழந்தைகள்
இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ் இரட்டை குழந்தைகளை பெற்றிருப்பதாகவும் அவர் குழந்தைகளை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளன. அதில் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்களை வைத்து உண்மை போலவே செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

நம்ப வேண்டாம்
இதை மறுத்துள்ள நடிகை மேக்னா ராஜ், இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். நல்ல விஷயங்கள் பற்றி பேசி நாட்களாகிவிட்டது. விரைவில் பேசுகிறேன். அதுவரை என்னைப் பற்றி வரும் தகவல்களையோ, வீடியோ செய்திகளையோ ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

புகார் அளியுங்கள்
நீங்கள் பாதுகாப்பாக இருங்கள். அந்த செய்திகள் பொய் என எங்களுக்குத் தெரியும் என்று ரசிகர்கள் சிலர் கூறியுள்ளனர். இன்னும் சிலர், இதுபற்றி புகார் அளியுங்கள் என்றும் அட்வைஸ் செய்துள்ளனர். பலர் உடல் நலத்தை பார்த்துக்கொள்ளும்படி அவருக்கு கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











