காதல் கணவரை பறிகொடுத்த நடிகை.. 8 வருடங்களுக்கு பிறகு மலையாளத்தில் ரீ எண்ட்ரி!

சென்னை:சந்தியா சந்தியா... சம்மதம் சொல்வாயா.. என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை மேக்னா ராஜ். தமிழில் இவர், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். காதல் கணவரை பறிகொடுத்த இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தார். தற்போது மீண்டும் மலையாளத்தில் ரீ எண்ட்ரியாக உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மேக்னா ராஜூம் கன்னட நடிகரான சிரஞ்சீவி சர்ஜாவும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து, 2018ம் ஆண்டு இரு வீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 2020ஆம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா தனது வீட்டில் குடும்பத்தினருடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பால் உயிரிழந்தது கன்னட திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

meghana raj malayalam

7 மாத கர்ப்பம்: சிரஞ்சீவி சர்ஜா இறந்த போது 7 மாத கர்ப்பிணியாக இருந்த மேக்னா ராஜுக்கு அதே ஆண்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜூனியர் சிரஞ்சீவிக்கு ராயன் ராஜ் சர்ஜா என பெயர் வைத்துள்ளார். கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் துயரத்தில் ஆழ்ந்து இருந்த மேக்னா தனது மகனை பார்த்து ஆறுதல் அடைந்து வருகிறார். அப்போது, தனது கணவரின் புகைப்படத்தை காட்டி இவர் தான் உன் அப்பாக என அறிமுகப்படுத்தி வருகிறார்.

meghana raj malayalam

இரண்டாவது திருமணம்: கணவரை இழந்து வாழும் மேக்னா, குழந்தைக்காக இரண்டாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் கூறிய போதும், தெளிவான முடிவில் இருந்த மோக்னா ராஜ், சிலர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளுங்கள் என்கிறார்கள். சிலர் உங்கள் மகனுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்கிறார்கள், அப்படியானால் நான் யாருடைய பேச்சை கேட்க வேண்டும்.உலகம் என்ன சொன்னாலும் உன் மனது என்ன சொல்லுகிறதோ அதை கேட்டு முடிவு எடுக்க வேண்டுமேன சர்ஜா அடிக்கடி சொல்லுவார். அதன்படி தான் முடிவு எடுப்பேன். இதுவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார்.

meghana raj malayalam

மலையாளத்தில் என்ட்ரி: திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த மேக்னா ராஜ், கணவர் மறைந்த பிறகு குழந்தைக்காக நடிப்பில் இருந்து விலகி இருந்தார். தற்போது மோக்னாவின் மகனுக்கு 4 வயதாகிவிட்டதால், மீண்டும் சினிமாவில் என்ட்ரியாக உள்ளார். 8 வருடங்களுக்குப் பிறகு சுரேஷ் கோபி நடிக்கும் மலையாள திரைப்படத்தில் மேக்னா ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அவருக்கு ரசிகர்கள் வாழ்த்தக்களை தெரிவித்து வருகின்றனர்.. மேக்னா ராஜின் கணவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா 22க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக அவர் 'ஷிவார்ஜுனா' என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருந்த போது தான் மாரடைப்பால் உயிரிழந்தார். நடிகர் சிரஞ்சீவி சர்ஜா நடிகர் அர்ஜுன் சர்ஜாவின் உறவினர் ஆவார்.

meghana raj malayalam

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X