அதே புன்னகையுடன்… நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு திரும்பிய மேக்னா ராஜ்!
சென்னை :நடிகை மேக்னா ராஜ் நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புக்கு திரும்பி உள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர், கன்னடத்தில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்லவந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். சிரஞ்சீவி சர்ஜாவும், மேக்னாராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சீரஞ்சீவி ராஜா இறந்த போது மேக்னா 6மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
தனது குழந்தையுடன் நீண்ட நாட்களாக நேரத்தை செலவிட்டு வந்த மேக்னா ராஜ், தற்போது கேமரா முன் தோன்றி ஒரு தொலைக்காட்சி விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. பல சோகங்களை மனதிற்குள் மறைத்துக்கொண்டு அதே புன்னகையுடன் திரையில் தோன்றினார் மேக்னா ராஜை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Click it and Unblock the Notifications