இப்பதானே விவாகரத்துன்னு சொன்னாங்க..பிரபல சின்னத்திரை நடிகையின் முதல் கணவர் இரண்டாவது திருமணம்!
சென்னை: பிரபல டிவி நடிகையின் கணவர் தனது காதலியை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
பிரபல சின்னத்திரை நடிகை மேக்னா வின்சென்ட். இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'தெய்வம் தந்த வீடு' தொடரில் சீதா ராம்குமார் சக்கரவர்த்தி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.
இதில் இவர் நடிப்பு பேசப்பட்டது. இது இந்தியில் வெளியான, சாத் நிபானா சாதியா என்ற தொடரின் ரீமேக்.

அவளும் நானும்
இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்மகள் வந்தாள்' என்ற தொடரில் ரோகிணி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த தொடரும் நன்றாகப் பேசப்பட்டது. அடுத்து, அவளும் நானும் என்ற தொடரிலும் நடித்தார். இதிலும் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டது. மலையாள நடிகையான மேக்னா வின்சென்ட், அங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார்.

கயல் படத்தில்
சில மலையாள படங்களிலும் நடித்துள்ள அவர், தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் ஆனந்தி, சந்திரன் நடித்த 'கயல்' படத்திலும் நடித்திருந்தார். இவர் டான் டோமி என்பவரை காதலித்து வந்தார். காதலுக்கு குடும்பத்தினர் பச்சை கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். டான் டோமியின் சகோதரி டிம்பிள் ரோஸூம் சின்னத்திரை நடிகை.

கருத்து வேறுபாடு
மேக்னா- டான் டோமி திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு எர்ணாகுளத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதில் ஏராளமான திரைத்துறையினரும் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

விவாகரத்து
இதனால் பிரிந்து தனித்தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாயின. டான் டோமி, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்று அப்போதே கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தனது காதலி டிவைன் கிளாரா மணிமுறியில் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

அதிகாரபூர்வமாக
இதுபற்றி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ள டான் டோனி, இது லாக்டவுன் திருமணம். எளிமையாகவும் தாழ்மையாகவும் நடந்த திருமணம். மாஸ்க் அணியாமல் திருமணம் செய்துகொண்டோம். அதிகாரபூர்வமாக அறிவிக்காததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்' என்று தெரிவித்துள்ளார். திருமணப் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்


Click it and Unblock the Notifications











