இவர் ஏன் எனக்கு இவ்வளவு பொருத்தமானவராக இருக்கிறார்.. கணவர் சிருவை பார்த்து ஆச்சரியப்பட்ட மேக்னா!
சென்னை: தனது கணவர் சிரஞ்சீவி சர்ஜா குறித்து நடிகை மேக்னா ராஜ் இன்ஸ்டாவில் பதிவிட்ட போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஞாயிற்றுக் கிழமை கடுமையான கார்டியாக் அரெஸ்ட்டால் மரணமடைந்தார். 39 வயதே ஆன சிரஞ்சீவி சர்ஜாவின் திடீர் மரணம் ஒட்டு மொத்த திரைத்துறையையும் அதிர வைத்தது.
அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் உள்ள துருவா சர்ஜாவின் பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது. சிரஞ்சீரி சர்ஜா மரணமடைந்து 4 நாட்கள் ஆகியும் அவர் தொடர்பான செய்திகள் நாள்தோறும் வெளியாகி உருக வைத்து வருகிறது.

தாத்தா, தாய் மாமா
நடிகர் சிரஞ்சீவி சர்ஜா முழுக்க முழுக்க சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது தாத்தா சக்தி பிரசாத் கன்னட திரைத்துறையின் முன்னணி நடிகராக வலம் வந்தவர். அவரது தாய் மாமாவான நடிகர் அர்ஜூன் கன்னடம் மற்றும் தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகர் ஆவார்.

மேக்னா கர்ப்பம்
சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை மேக்னா ராஜூவை கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். நடிகை மேக்னா ராஜூவை பத்தாண்டுகளாக காதலித்தார் சிரஞ்சீவி. தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார் மேக்னா ராஜ்.

நெஞ்சை பிழியும் போட்டோ
இருவரும் தங்களின் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சிரஞ்சீவி சர்ஜா அகால மரணமடைந்துவிட்டார். இந்நிலையில் அவர்கள் இருவரும் நெருக்கமாகவும் அன்யோன்யமாகவும் இருந்த போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி நெஞ்சை பிழிந்தது.

இத்தாலிக்கு சுற்றுலா
இந்நிலையில் நடிகை மேக்னா ராஜ், தனது கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட போஸ்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேக்னாவும் அவரது கணவர் சிரஞ்சீவி சர்ஜாவும் இத்தாலியின் ரோம் நகருக்கு சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட போட்டோ அது.

ஏன் இவ்வளவு பர்ஃபெக்ட்?
அதில் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தப்படி உள்ளனர். அதற்கு சில நேரங்களில் ஏன்? என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது. இந்த மனிதர் ஏன் இவ்வளவு பர்ஃபெக்ட்டாக உள்ளார்... எனக்கு மிகவும் மிகவும் பர்ஃபெக்ட்டாக உள்ளார்? பின்னர் அதற்கு பதில் கிடைத்துவிட்டது. பொருத்தமில்லாத ஜிக்சாஸ் பர்ஃபெக்ட்டாக பொருந்தும்! இவ்வாறு நடிகை மேக்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறந்த ஃபீலிங்
இதேபோல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரிக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ள மேக்னா, அந்த போட்டோவுக்கு நீங்கள் ஒருவரை பார்க்கும் போது அவர் உங்களை ஏற்கனவே வெறித்து பார்த்துகொண்டிருப்பது ஒரு சிறந்த உணர்வு.. என பதிவிட்டுள்ளார்.

நான் சாய்ந்துகொள்ள..
இதேபோல் இத்தாலியின் பைசா டவர் அருகே எடுத்த போட்டோவையும் மேக்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் சிரஞ்சீவி சர்ஜாவின் மீது சாய்ந்தப்படி இருக்கும் மேக்னா, அந்த போட்டோவுக்கு நான் சாய்ந்து கொள்ள விரும்பும் ஒரே டவர் நீங்கள் தான் என பதிவிட்டுள்ளார்.

சினிமா குடும்பம்
அவர்களின் இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தை கலங்கடித்து வருகிறது. நடிகை மேக்னா ராஜூம் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். மேக்னா ராஜ், கன்னட நடிகர் சுந்தர் ராஜ் - நடிகை பிரமிளா ஜோஷாயின் ஒரே மகள் ஆவார். மேக்னா ராஜ் தமிழிலும் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











