வைத்த கண் வாங்காமல் பார்க்கும் சிரு.. முதல் நினைவுநாளில் நடிகை மேக்னா ராஜின் கலங்க வைக்கும் பதிவு!
சென்னை: மறைந்த கணவர் சிரு தன்னை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கலங்க வைத்துள்ளார் நடிகை மேக்னா ராஜ்.
கன்னட திரைத்துறையின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார்.
அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் அவரின் சகோதரர் துருவா சர்ஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

பிடித்த இடம்
அந்த பண்ணை வீடுதான் சிரஞ்சீவி சர்ஜாவுக்கு பிடித்த இடம் என்பதால் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த சிரஞ்சீவி சர்ஜா, தமிழில் வெளியான சண்டக்கோழி கன்னட ரீமேக் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பிரபல சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி சர்ஜா.

உலுக்கிய மரணம்
சிரஞ்சீவி சர்ஜாவின் தாத்தா பிரபல கன்னட நடிகரான சக்தி பிரசாத் ஆவார். சிருவின் மாமா, பிரபல நடிகரான அர்ஜூன் சர்ஜா ஆவார். சிருவின் சகோதரர் துருவா சர்ஜாவும் கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆவார்.

2018ல் திருமணம்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சிருவின் மரணம் கன்னட திரைத்துறையை கடந்த ஆண்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2018ஆம் ஆண்டுதான் தன்னுடைய நீண்ட நாள் காதலியான நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார்.

தமிழிலும் சில படங்கள்
மேக்னா ராஜூம் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். கன்னட நடிகர் சுந்தர் ராஜ் - நடிகை பிரமிளா ஜோஷாயின் ஒரே மகள் ஆவார். மேக்னா ராஜ் தமிழிலும் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

5 மாத கர்ப்பிணி
அவர்களின் திருமணம் முதலில் கிறிஸ்தவ முறைப்படியும் பின்னர் இந்து முறைப்படியும் நடந்து முடிந்தது. பொருத்தமான ஜோடியாக வலம் வந்தனர் இருவரும். சிரு இறக்கும் போது மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

முதல் நினைவு நாள்
இருவரும் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போதுதான் கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அகால மரணமடைந்தார் சிரு. இந்நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று கடை பிடிக்கப்பட்டது.

கணவரின் போட்டோ
இதனை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் சிரஞ்சீவி சர்ஜாவின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவரது மனைவியான மேக்னா ராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் சிருவுடன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார்.

கலங்கும் ரசிகர்கள்
அந்த போட்டோவில் தனது மனைவியை சிரித்தப்படியே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார் சிரு. அந்த போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள மேக்னா என்னுடையது என கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பலரும் கலங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











