எப்போதும் காதலித்துக்கொண்டே இருப்பேன் மறைந்த கணவர் சிருவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மேக்னா ராஜ்!

சென்னை: எப்போதும் உங்களை காதலித்துக் கொண்டே இருப்பேன் என மறைந்த நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

கன்னட சினிமாத்துறையில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜா. சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் அக்காள் மகன் ஆவார்.

இவரது மனைவி மேக்னா ராஜ். இவர்கள் 2 பேரும் 10 ஆண்டுகள் காதலித்து கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

உலுக்கிய மரணம்

உலுக்கிய மரணம்

மேக்னா ராஜ் கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், திடீரென ஏற்பட்ட கார்டியாக் அரெஸ்ட் காரணமாக நடிகர் சிரஞ்சீவி சர்ஜா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவரது மரணம் மேக்னா ராஜை மட்டுமின்றி அவரது குடும்பத்தினர் மற்றும் கன்னட சினிமாத்துறையையும் உலுக்கியது.

வளைகாப்பு

வளைகாப்பு

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள வீட்டில் வைத்து நடிகை மேக்னாராஜுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சிரஞ்சீவி சர்ஜா, மேக்னா ராஜின் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

சிருவே வந்தது போல்

சிருவே வந்தது போல்

இந்த நிகழ்ச்சியில் மறைந்த சிரஞ்சீவி சர்ஜாவின் பேனர், மேக்னா ராஜ் அமர்ந்திருந்த நாற்காலி அருகே வைக்கப்பட்டு இருந்தது. ஆள் உயரத்திற்கு வைக்கப்பட்ட அந்த பேரின் மூலம் சிரஞ்சீவி சர்ஜாவே நேரில் பங்கேற்றது போல் இருந்தது.

சிரு பிறந்த நாள்

சிரு பிறந்த நாள்

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை உருக வைத்தது. இந்நிலையில் மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் பிறந்தநாள் நேற்று. இதனை முன்னிட்டு அவரது காதல் மனைவியான மேக்னா ராஜ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிருவின் போட்டோவை பகிர்ந்து வாழ்த்து கூறினார்.

காதலித்துக் கொண்டே இருப்பேன்

காதலித்துக் கொண்டே இருப்பேன்

அதில் தனது கணவர்தான் தனது உலகம் என குறிப்பிட்டுள்ளார் மேக்னா ராஜ். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் உலகமே.. நான் எப்போதும் உங்களை காதலித்துக் கொண்டே இருப்பேன் சிரு என மறைந்த தனது கணவரின் இன்ஸ்டா ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார்.

மிஸ் யூ சிரு

மிஸ் யூ சிரு

அவரது இந்த பதிவை பார்த்த பலரும்.. மிஸ் யூ சிரு என தங்களின் சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இன்னும் சில ரசிகர்கள் ஜூனியர் சிருவை காண காத்திருக்கிறோம் என தெரிவித்துள்ளனர். பல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X