Don't Miss!
- News
வந்தே பாரத் ரயிலே நொந்து போய் கிடக்கு.. இதுதான்யா நம்ம பய புத்திங்கிறது.. பாருங்க போட்டோவை
- Lifestyle
உங்க கொழுப்பை குறைத்து...உடல் எடையை சீக்கிரம் குறைக்க நீங்க இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணா போதுமாம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Automobiles
பணக்காரர்களுக்கான சீப்பான எஸ்யூவிகார் இதான்! பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் இந்தியாவில் அறிமுகம்!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Finance
பாகிஸ்தான் ரூபாய் நிலைமை ரொம்ப மோசம்.. இப்படியே போச்சுன்னா..!!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சிருவுடன் ரொமான்டிக் படம் பண்ணனும்.. ஆசைப்பட்ட மேக்னா ராஜ்.. கலங்க வைக்கும் 'ஓல்டு' வீடியோ!
சென்னை: நடிகை மேக்னா ராஜ் தனது கணவரான சிரஞ்சீவி சர்ஜாவுடன் ரொமான்டிக் படம் பண்ண வேண்டும் என கூறிய பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
கன்னட திரைத்துறையின் பிரபல நடிகரான சிரஞ்சீவி சர்ஜா கடந்த ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு மரணமடைந்தார்.
ராஜு பாய் 'அஞ்சான்' 7 ஆண்டு நிறைவு… இணையத்தில் வைரலாகும் ஹேஷ்டேக்!
அவரது உடல் பெங்களூரு கனகாபுரத்தில் அவரின் சகோதரர் துருவா சர்ஜாவுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

சிரஞ்சீவி சர்ஜாவின் ஃபேவரைட் ஸ்பாட்
அந்த பண்ணை வீடுதான் சிரஞ்சீவி சர்ஜாவின் ஃபேவரைட் ஸ்பாட் என்பதால் அங்கேயே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறைந்த சிரஞ்சீவி சர்ஜா, தமிழில் வெளியான சண்டக்கோழி கன்னட ரீமேக் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். பிரபல சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் சிரஞ்சீவி சர்ஜா.

நடிகர் அர்ஜூனின் மருமகன்
சிரஞ்சீவி சர்ஜாவின் தாத்தா பிரபல கன்னட நடிகரான சக்தி பிரசாத் ஆவார். சிருவின் மாமா, பிரபல நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜூன் சர்ஜா ஆவார். சிருவின் சகோதரர் துருவா சர்ஜாவும் கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருகிறார்.

நீண்ட நாள் காதல் - திருமணம்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்த சிருவின் மரணம் கன்னட திரைத்துறையை கடந்த ஆண்டு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிரஞ்சீவி சர்ஜா கடந்த 2018ஆம் ஆண்டுதான் தன்னுடைய நீண்ட நாள் காதலியான நடிகை மேக்னா ராஜை திருமணம் செய்தார்.

மேக்னா ராஜூம் சினிமா குடும்பம்தான்
மேக்னா ராஜூம் சினிமா குடும்பத்தை சேர்ந்தவர் தான். கன்னட நடிகர் சுந்தர் ராஜ் - நடிகை பிரமிளா ஜோஷாயின் ஒரே மகள் ஆவார். மேக்னா ராஜ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அதாவது, காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

சிரு இறக்கும் போது 5 மாத கர்ப்பிணி
அவர்களின் திருமணம் முதலில் கிறிஸ்தவ முறைப்படியும் பின்னர் இந்து முறைப்படியும் நடந்து முடிந்தது. பார்ப்பவர் கண் படும்படி பொருத்தமான ஜோடியாக வலம் வந்தனர் இருவரும். சிரு இறக்கும் போது மேக்னா ராஜ் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

ஆண் குழந்தை - சிருவே பிறந்து விட்டார்
இருவரும் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அப்போதுதான் கடுமையான கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அகால மரணமடைந்தார் சிரு. சிரு இறந்து 5 மாதங்கள் கழித்து மேக்னா ராஜ்க்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சிருவே மீண்டும் பிறந்து வந்துவிட்டதாக குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர்.

கலங்க வைக்கும் பழைய வீடியோ
கணவர் மரணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகை மேக்னா ராஜ். இந்நிலையில் மேக்னா ராஜின் பழைய வீடியோ ஒன்று வைரலாகி காண்போரை கலங்க செய்து வருகிறது. சிரு மரணத்திற்கு பிறகு அவருடைய ரசிகர்கள் இருவரின் பழைய போட்டோக்களையும் வீடியோக்களையும் த்ரோபேக் செய்து வருகின்றனர்.

நடிப்புக்கு சிரு எப்போதும் ஆதரவு
அந்த நேர் காணல் வீடியோவில் பேசும் மேக்னா ராஜ், "என்னுடைய நடிப்புத் தொழிலுக்கு சிரு எப்போதும் ஆதரவாக இருப்பார். எப்போதும் நல்லப்படியாக வேலை செய்யத் தூண்டுகிறார். உண்மையில், திருமணத்திற்குப் பிறகும் அவர் என் நடிப்புத் தொழிலை தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

ரொமான்டிக் படத்தில் நடிக்க வேண்டும்
நானும் சிருவும் ஜோடியாக அடகராவில் நடித்தோம். அது ஒரு மல்டி ஸ்டாரர் படம்தான், ஒரு முழு நீள காதல் படம் அல்ல. இப்போது, அவருடன் முழு நீள ரொமான்டிக் படம் செய்ய என்னால் காத்திருக்க முடியாது, அதில் நாங்கள் இருவரும் ஹீரோ ஹீரோயினாக இருக்க வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். தங்களின் நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு இந்த நேர்காணலை அளித்துள்ளார் மேக்னா ராஜ்.

நிறைவேறாமல் போன ஆசை
மேக்னா ராஜின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேக்னா ராஜின் இந்த ஆசை நிறைவேறுவதற்குள் திடீர் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு அகால மரணமடைந்தார் சிரஞ்சீவி சர்ஜா. இதனால் கணவருடன் நடிக்க வேண்டும் என்ற மேக்னா ராஜின் ஆசை நிறைவேறாத ஆசையாகவே போய்விட்டது.