அரசியல்வாதி மகனுடன் நிச்சயதார்த்தம் முடித்த தனுஷ் பட ஹீரோயின் வைரலாகும் போட்டோஸ்!

சென்னை: தனுஷ் பட ஹீரோயின் ஒருவர் அரசியல்வாதி மகனுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா.

தொடர்ந்து நோட்டா மற்றும் தனுஷின் பட்டாசு படத்திலும் நடித்துள்ளார் மெஹ்ரீன்.

அரசியல்வாதி மகன்

அரசியல்வாதி மகன்

மேலும் தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, எஃப் 3 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் நடிகை மெஹ்ரீன். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு அரசியல்வாதி மகன் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியானது.

முன்னாள் முதல்வர்

முன்னாள் முதல்வர்


இந்நிலையில் நடிகை மெஹ்ரீன் பிர்ஸடாவுக்கு நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. மெஹ்ரீனை திருமணம் செய்துக்கொள்ளும் மாப்பிள்ளை பவ்யா பிஷ்னோய் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார்.

ஜெய்ப்பூர் அரண்மனை

ஜெய்ப்பூர் அரண்மனை

இவர்களின் நிச்சயதார்த்தம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு முந்தைய வைபவமான இந்த போட்டோக்களை நடிகை மெஹ்ரீன் பிர்ஸடாவின் சகோதரர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

திரைத்துறை பிரபலங்கள்

திரைத்துறை பிரபலங்கள்

இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை பிரபலங்களான தமன்னா, கல்யாணி பிரியதர்ஷன், ராகுல் வைத்யா, நிகில் பாம்ப்ரி உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X