கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. திருமணத்தை தள்ளி வைத்த தனுஷ்பட நடிகை!

சென்னை: கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளதை தொடர்ந்து பிரபல நடிகை தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நெஞ்சில் துணிவிருந்தால்

நெஞ்சில் துணிவிருந்தால்

இந்நிலையில் பிரபல நடிகையான மெஹ்ரீன் பிர்ஸடா கொரோனா காரணமாக தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்ஸடா.

தனுஷுடன் பட்டாசு

தனுஷுடன் பட்டாசு

தொடர்ந்து நோட்டா மற்றும் தனுஷின் பட்டாசு படத்திலும் நடித்துள்ளார் மெஹ்ரீன்.மேலும் தெலுங்கு, இந்தி மற்றும் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது, எஃப் 3 என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் நடிகை மெஹ்ரீன்.

அரசியல் குடும்பம்

அரசியல் குடும்பம்

இந்நிலையில் கடந்த சில மார்ச் மாதம் அவருக்கு அரசியல்வாதி மகன் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மெஹ்ரீனை திருமணம் செய்துக்கொள்ளும் மாப்பிள்ளை பவ்யா பிஷ்னோய் ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் ஆவார்.

ஜெய்ப்பூர் அரண்மனை

ஜெய்ப்பூர் அரண்மனை

இவர்களின் நிச்சயதார்த்தம் ஜெய்ப்பூர் அரண்மனையில் கடந்த மார்ச் 11ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடைபெற்றது.

மே மாதம் திருமணம்

மே மாதம் திருமணம்

திருமணத்திற்கு முந்தைய வைபவமான இந்த போட்டோக்கள் இணைய பக்கத்தில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து மெஹ்ரீனுக்கு மே மாதம் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியானது.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

திருமணத்திற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் நடிகை மெஹ்ரினுக்கும் அவரது அம்மாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமணத்தை தள்ளி வைக்க குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தள்ளி வைக்க முடிவு

தள்ளி வைக்க முடிவு

இதுதொடர்பாக தெரிவித்துள்ள மெஹ்ரீன் பிர்ஸடா, கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. இந்த நேரத்தில் திருமணத்தை நடத்துவது பாதுகாப்பாக இருக்காது. எனவே அடுத்த ஆண்டுக்கு திருமணத்தை தள்ளி வைக்க யோசித்து வருவதாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X