twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பட்டப்பகலில்.. கொட்டும் மழையில்.. நடிகையிடம் தவறாக நடந்த டாக்ஸி டிரைவர்.. பகீர் சம்பவம்!

    |

    சென்னை: பட்டப்பகலில் கொட்டும் மழையில் நடிகையிடம் டாக்ஸி டிரைவர் தவறாக நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    31 வயதான மிமி சக்கரவர்த்தி பிரபல நடிகையாகவும் எம்பியாகவும் உள்ளார்.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் ஜாதேவ்பூர் தொகுதியின் எம்பியாகவும் உள்ளார்.

     60% சொந்த கதை தான் பாஸ்.. மாமனார் கோவிச்சுக்கிட்டார்.. 2 ஸ்டேட்ஸ் இயக்குநர் கலாட்டா பேட்டி! 60% சொந்த கதை தான் பாஸ்.. மாமனார் கோவிச்சுக்கிட்டார்.. 2 ஸ்டேட்ஸ் இயக்குநர் கலாட்டா பேட்டி!

    டாக்ஸி டிரைவர்

    டாக்ஸி டிரைவர்

    இந்நிலையில் நேற்று பகல் ஜிம்மில் இருந்து மிமி சக்ரவர்த்தி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை பின்தொடர்ந்து வந்த டாக்ஸி டிரைவர், பாலிகஞ்ச் ஃபரி என்ற இடத்தில் அவரது காரை ஓவர் டேக் செய்து தகாத வார்த்தையால் பேசியுள்ளார்.

    ஆபாச சைகை

    ஆபாச சைகை

    மேலும் ஆபாசமான சைகைகளை செய்து தவறாகவும் நடக்க முயற்சித்துள்ளார். இதனை பார்த்து மக்கள் கூட்டம் கூடவே அந்த டாக்ஸி டிரைவர் தனது காரை எடுத்துக் கொண்டு பறந்துவிட்டார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மிமி சக்ரவர்த்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

    பலத்த மழை பெய்தது

    பலத்த மழை பெய்தது

    அதில் அவர் பேசியிருப்பதாவது, "இந்த சம்பவம் மதியம் 2 மணியளவில் நடந்தது. நான் என் காரில் தனியாக இருந்தேன், பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. முதலில், நான் அந்த நபரை புறக்கணிக்க முயன்றேன், என் டிரைவரை வேகமாக செல்லும்படி சொன்னேன்.

    மோசமாக பேசினார்

    மோசமாக பேசினார்

    ஆனால் அந்த நபர் என் காரைப் பின்தொடர்ந்தார், பின்னர், கரியாஹாட் பாலத்தின் அருகே, அவர் மீண்டும் மோசமான கருத்துக்களைக் கூறி, ஆபாசமான சைகைகளைச் செய்யத் தொடங்கினார். அவர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதாக நான் உணர்ந்தேன்.

    பாடம் கற்பிக்க

    பாடம் கற்பிக்க

    நான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த டாக்ஸி டிரைவர் மனரீதியாக சரி இல்லை என்பதை நான் உணர்ந்தேன். எனவே, நான் எனது காரை நிறுத்தி அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தேன். ஆனால் ஏராளமான மக்கள் கூடிவருவதைக் கண்ட அவர் தப்பி ஓடிவிட்டார்.

    போலீஸ்க்கு நன்றி

    போலீஸ்க்கு நன்றி

    பின்னர், நான் காரியாஹத் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் அந்த நபரை கைது செய்தனர். அவர் இப்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். தேவையானதை செய்ததற்காக கொல்கத்தா காவல்துறைக்கு நன்றி.

    4 மணி நேரத்தில் கைது

    4 மணி நேரத்தில் கைது

    நாம் அனைவரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த மக்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள்." என கூறியுள்ளார். இதனிடையே மிமி சக்கரவர்த்தியிடம் தவறாக நடக்க முயன்ற அந்த டாக்ஸி டிரைவரை போலீசார் அடுத்த 4 மணி நேரத்திற்குள் கைது செய்தனர்.

    English summary
    Actress Mimi Chakraborty harassed by a taxi driver. Police has arrested the taxi driver. Mimi Chakraborty is a Trinamool Congress MP from Jadavpur.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X