நீண்டநாள் காதலரான சின்னத்திரை நடிகரை திருமணம் செய்த பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: நீண்டநாள் காதலரான சின்னத்திரை நடிகரை பிரிபல நடிகை திருமணம் செய்துள்ளார்.

கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழில் ராஜா தேசிங்கு இயக்கத்தில் வெளியான நூறாம் நாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து ஜெனிஃபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் ஆகிய படங்களிலும் நடித்தார். அதன் பிறகு மலையாள சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைத்தன.

பிரிட்டிஷ் பங்களா

பிரிட்டிஷ் பங்களா

செலிபிரேஷன், பிரிட்டிஷ் பங்களா ஆகிய படங்களில் நடித்துள்ளார் மிருதுள விஜய். எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார் நடிகை மிருதுளா விஜய்.

டிவி நடிகையான மிருதுளா

டிவி நடிகையான மிருதுளா

மலையாள தொலைக்காட்சி சேனல்களான ஏசியாநெட், மழவில் மனோரமா, ஜீ கேரளம் உள்ளிட்ட தொலைக்காட்சி சேனல்களில் ஏராளமான சீரியல்களில் நடித்து வருகிறார். இதன் மூலம் சின்னத்திரையிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் மிருதுளா விஜய்.

சீரியல் நடிகருடன் காதல்

சீரியல் நடிகருடன் காதல்

இவரது தங்கையான பார்வதியும் மலையாள திரையுலகில் சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் சின்னத்திரை நடிகரான யுவா கிருஷ்ணாவுடன் மிருதுளாவுக்கு காதல் மலர்ந்தது.

நேற்று திருமணம்

நேற்று திருமணம்

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யுவா கிருஷ்ணாவுடன் நடிகை மிருதுளாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

பர்ஃபெக்ட் ஜோடி

பர்ஃபெக்ட் ஜோடி

இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர். இதில் இருவரும் ட்ரெடிஷ்னல் உடையில் கலக்கலாக இருந்தனர். இவர்களின் திருமண போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பர்ஃபெக்ட் ஜோடி என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

லைக்ஸை குவித்த போட்டோக்கள்

லைக்ஸை குவித்த போட்டோக்கள்

திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மெஹந்தி செர்மனி நடைபெற்றது. இதில் யுவா கிருஷ்ணா மஞ்சள் நிற குர்தாவும் மிருதுளா மஞ்சள் நிற லெஹாங்காவும் அணிந்திருந்தனர். இன்ஸ்டாவில் ஷேர் செய்யப்பட்ட அந்த போட்டோக்கள் லைக்ஸ்களை குவித்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X