லாக்டவுனில் அவசரம் அவசரமாக நடந்த திருமண நிச்சயதார்த்தம்.. பிரபல நடிகைக்கு செப்டம்பரில் கல்யாணம்!
சென்னை: பிரபல நடிகைக்கு அவசரம் அவசரமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
Recommended Video
தமிழில் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளவர், பிரபல மலையாள நடிகை மியா ஜார்ஜ்.
மலையாளத்தில் ராஜசேனன் இயக்கிய, ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இவர்.

டிரைவிங் லைசன்ஸ்
பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், மோகன்லாலின், மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல், பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு நடித்த டிரைவிங் லைசன்ஸ் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். டிரைவிங் லைசென்ஸ் படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

ஒரு நாள் கூத்து
ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தார். இதில் ஆர்யாவின் தம்பி சத்யா ஹீரோவாக நடித்தார். இதையடுத்து விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

லாக்டவுன்
இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் கண்மணிலா, காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் என நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன. இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிச்சயதார்த்தம்
இவருக்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து அஸ்வின் வீட்டில் அவசரம் அவசரமாகத் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. லாக்டவுன் காரணமாக, இந்தத் திருமண நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் திருமணம் செப்டம்பர் மாதம் கேரளாவில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications











