87 ஆபாச வீடியோ.. தனி பங்களாவில் ஷூட்டிங்.. பிரபல நடிகை திடீர் கைது.. திரையுலகம் அதிர்ச்சி!

By

மும்பை: ஆபாச படம் எடுத்து பதிவேற்றியதாக, பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழில் கண்மணி இயக்கத்தில் வெளியான படம், 'பேய்கள் ஜாக்கிரதை'. இதில் ஜீவரத்தினம், தம்பி ராமையா, மனோபாலா, ஜான் விஜய் உட்பட பலர் நடித்திருந்தனர்.

ஹாரார் காமெடி படமான இது, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி கவனிக்கப்பட்டது.

ஒரு பாடலுக்கு ஆட்டம்

ஒரு பாடலுக்கு ஆட்டம்

இதில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தவர், கெஹனா வசிஸ்த். இந்தி நடிகையான இவர், அங்கு பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், இந்தி டிவி சீரியல்களிலும் பல வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

மிஸ் ஆசிய பிகினி டைட்டிலை வென்ற இவர், பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தனி ஆன்லைன் சேனல் ஒன்றை தொடங்கி, அதில் ஆபாச படங்களைப் பதிவேற்றி உள்ளார். இதைப் பார்க்க, ரூ.2000 கட்டணம் செலுத்தி சந்தாதாரர் ஆகவேண்டும். இதில் ஏராளமானவர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். அவர்களுக்காக சிலருடன் இணைந்து ஆபாச படங்களை தயாரித்துள்ளார்.

தனி அறையில்

தனி அறையில்

இதுபற்றி போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மலாட்- மல்வானி பகுதியில் இருக்கும் பங்களா ஒன்றில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தனி அறையில் ஆபாச படம் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து அதில் தொடர்புடையதாக, நடிகை கெஹனா வசிஸ்த்தை போலீசார் கைது செய்தனர்.

87 ஆபாச விடியோ

87 ஆபாச விடியோ

மேலும் அங்கிருந்த இரண்டு நடிகர்கள், ஒரு பெண் புகைப்படக் கலைஞர், ஒரு டிசைனர் ஆகியோரையும் கைது செய்தனர். ஓர் இளம் பெண் அவர்களிடம் இருந்து மீட்கப்பட்டார். நடிகை கெஹனாவிடம் விசாரித்தபோது, அவர் இதுவரை 87 ஆபாச விடியோக்களை தயாரித்து பதிவேற்றியுள்ளது தெரியவந்தது.

நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தில் ஆஜர்

இதையடுத்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சில மாடல்கள் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார். ஆபாசப் பட விவகாரத்தில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X