அறிகுறியே இல்லையாம்.. டிவி நடிகைக்கு கொரோனா பாதிப்பு.. குடும்பத்தோடு மருத்துவமனையில் அட்மிட்!
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக பிரபல நடிகை குடும்பத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
ரெமோ டிசோசா இயக்கத்தில் பிரபுதேவா நடித்த ஏபிசிடி படத்தில் நடித்திருப்பவர் மோகனா குமாரி சிங்.
இவர் பியார் துனே க்யா கியா, யே ரிஷ்டா க்யா கெஹ்லாதா ஹே, ட்விஸ்ட்வாலா லவ், சில்சிலா பியார் கா, ஃபியர் ஃபைல்ஸ், உட்பட பல இந்தி சிரியல்களில் நடித்துள்ளார்.

லாக்டவுன்
கொரோனா காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் குறைவான ஆட்களுடன் படப்பிடிப்பை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு இல்லாததால், நடிகை மோகனா குமாரி சிங் தனது குடும்பத்துடன் டேராடூனில் வசித்து வருகிறார்.

காய்ச்சல் அறிகுறி
இந்நிலையில் இவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: டேராடூனில் வசித்து வருகிறோம். எனது மாமியாருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. அதனால் கொரோனா பரிசோதனை செய்தோம். ஒன்றுமில்லை. மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால், காய்ச்சல் குறையவில்லை.

மருத்துவமனை
இதனால் குடும்பத்தோடு பரிசோதனை செய்தோம். அப்போது எங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரிஷிகேஷில் உள்ள மருத்துவமனையில் குடும்பத்தினர் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கு எந்த கொரோனா அறிகுறியும் முதலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எங்களைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வருவது துரதிர்ஷ்டவசமானது.

பாதிக்கப்பட்டு உள்ளோம்
எங்கள் மைத்துனரை தவிர அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். டேராடூனில் வானிலையும் அடிக்கடி மாறிக் கொண்டிருக்கிறது. சில நேரம் வெயிலாகவும் சில நேரம் மழை, குளிராகவும் இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். டிவி நடிகை ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது இந்தி சின்னத்திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











