கறுப்பு நிற பிகினியில் மல்லாக்கப்படுத்து.. படகை போல் மிதக்கும் பிரபல நடிகை.. தீயாய் பரவும் போட்டோ!

சென்னை பிரபல நடிகை நீச்சல் குளத்தில் பிகினியில் மிதக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Recommended Video

பிரபல நடிகைக்கு கொரோனா, மருத்துவமனையில் அனுமதி| Mohena Kumari

நடிகை மோனலிசா மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்டவர். அன்டரா பிஸ்வாஸ் என்ற தனது பெயரை சினிமாவில் நடிப்பதற்காக மோனலிசா என மாற்றிக்கொண்டார்.

போஜ்புரி மொழி படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த மோனலிசா, இதுவரை 125க்கும் மேற்பட்ட போஜ்புரி படங்களில் நடித்துள்ளார்.

சிம்புடன் சிலம்பாட்டம்

சிம்புடன் சிலம்பாட்டம்

அதுமட்டுமின்றி இந்தி, பெங்காலி, ஒடியா, தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் நடிகர் அர்ஜூனுடன் வாத்தியார் படத்திலும் நடிகர் சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்திலும் நடித்துள்ளார் மோனலிசா.

நஸர் சீரியல்

நஸர் சீரியல்

இதேபோல் காதலுக்கு மரணமில்லை, என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தொடர்ந்து சினிமா, தொலைக்காட்சி என பிஸியாக உள்ளார் மோனலிசா. நஸர் என்ற சீரியலில் மோகனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதே கண்கள்

அதே கண்கள்

அந்த சீரியல் விஜய் டிவியில் அதே கண்கள் என பெயரில் ஒளிபரப்பானது. இதன் மூலம் இல்லத்தரசிகள் மத்தியிலும் பெரும் பிரபலமானார் மோனலிசா. அதோடு இந்தி பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பாலிவுட்டில் பிளாக்மெயில் என்ற படத்தில் அஜய்தேவ்கன் மற்றும் சுனில் ஷெட்டியுடன் இணைந்து நடித்தார்.

நடிகருடன் திருமணம்

நடிகருடன் திருமணம்

மோனலிசா விக்ராந்த் சிங் ராஜ்பூட் என்ற போஜ்பூரி நடிகரை கடந்த 2017ஆம் ஆண்டு பிக்பாஸ் வீட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வெப் சீரிஸ் என பிஸியாக உள்ள மோனலிசா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார்.

32 லட்சம் பேர்

32 லட்சம் பேர்

இன்ஸ்டாகிராமில் மட்டும் நடிகை மோனலிசாவை 32 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்பற்றி வருகின்றனர். தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிகினி தரிசனம்

பிகினி தரிசனம்

தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டில் கணவருடன் ஜாலியாக பொழுதை கழித்து வரும் மோனலிசா, ஆட்டம் பாட்டம் என கொண்டாடி வருகிறார். கணவருடன் அவ்வப்போது நெருக்கமாக இருக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரணகளப்படுத்தும் மோனலிசா, பிகினியிலும் தரிசனம் கொடுத்து வருகிறார்.

படகை போல் மிதந்து

படகை போல் மிதந்து

அடிக்கடி கலர் கலர் பிகினியில் உசுப்பேற்றும் மோனலிசா தற்போது கறுப்பு நிற பிகினியில் கிறங்க வைத்துள்ளார். டூ பீஸ் பிகினி அணிந்துள்ள அவர் கண்ணாடி போன்ற தண்ணீரில் மட்ட மல்லாக்க படுத்துக்கொண்டு படகை போல் மிதந்து சொக்க வைத்துள்ளார்.

அள்ளும் லைக்ஸ்

அள்ளும் லைக்ஸ்

அவரது இந்த பிகினி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாவ்... என லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டுள்ளனர். இந்த போட்டோவை இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மோனலிசாவின் இந்த ஹாட் பிகினி போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X