twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மெட்ரோ பணியின் போது 11வது மாடியில் இருந்து விழுந்த பெரிய பாறை.. நூலிழையில் உயிர் தப்பிய பிரபல நடிகை!

    நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் மும்பையில் நடந்த ஒரு விபத்தில் இருந்து நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.

    |

    மும்பை: நாகினி சீரியல் நடிகை மௌனி ராய் ஒரு விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

    நாகினி என்ற ஒரே சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை மௌனி ராய். இவர் தற்போது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எனவே சீரியல்களில் நடிப்பதில்லை.

    Actress Mouni roy escapes life from a accident in Mumbai

    மௌனி ராய் தற்போது நடித்துள்ள படம் 'மேட் இன் சைனா'. இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதறக்காக மௌனி ராய் காரில் சென்று கொண்டிருந்தார்.

    3 வேளையும் நல்லா சமைக்க தெரிந்த மாப்பிள்ளை வேணும் -அதா சர்மா ட்வீட்3 வேளையும் நல்லா சமைக்க தெரிந்த மாப்பிள்ளை வேணும் -அதா சர்மா ட்வீட்

    ஜூஹு சிக்னலில் கார் நின்று கொண்டிருந்த போது, மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் இருந்து ஒரு பெரிய பாறை கார் மீது விழுந்தது. சுமார் 11வது மாடியில் இருந்து அந்த பாறை விழுந்துள்ளது. இதில் காரின் மேற்பக்க கண்ணாடி உடைந்துவிட்டது. நல்லவேளையாக மௌனி ராய்க்கு எதுவும் ஆகவில்லை. நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து தனது டிவீட் செய்துள்ள மௌனி ராய், "நான் காரில் சென்று கொண்டிருந்த போது ஜூஹு சிக்னல் அருகே மெட்ரோ கட்டுமானத்தில் இருந்து பெரிய பாறை காரின் மீது விழுந்தது. இதுவே நடந்து போனவர்கள் யார் மீதாவது விழுந்திருந்தால் என்னவாகியிருக்கும். மும்பை மெட்ரோ பொறுப்புடன் நடப்பதற்கு யாராவது ஆலோசனை இருந்தால் சொல்லுங்கள்', என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

    மேட் இன் சைனா படத்தை அடுத்து, பிரமாஸ்த்ரா எனும் படத்தில் மௌனி ராய் நடித்துள்ளார். இந்த படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அபிதாப் பச்சன் ஆகியோருடன் சேர்ந்து அவர் நடித்து வருகிறார்.

    English summary
    The Nagini serial fame actress Mouni Roy had a great escape from a accident in Mumbai two days back. "Was on my way to work at Juhu signal a huge rock falls on the car 11 floors up. cant help but think what if anybody was crossing the road. Any suggestions as to what to be done with such irresponsibility of the mumbai metro?", she tweeted.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X