அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தவறாக டேக் செய்த பிரபல நடிகை.. ஃபுல் போதையா என பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகையான மவுனி ராய் பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகருக்கு நன்றி சொல்வதற்கு பதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்தின் டிவிட்டர் ஹேண்டிலை தவறாக குறிப்பிட்டு நன்றி சொன்னதை மரண ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நடிகை மவுனி ராய் டிவி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். ஏராளமான சீரியல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார் நடிகை மவுனி ராய்.

குறிப்பாக மவுனி ராய் நடித்த நாகினி சீரிஸ்கள் பெரும் ஹிட்டானது. இந்தி மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மொழிகளிலும் நாகினி சீரியல்கள் மொழி பெயர்க்கப்பட்டு, பெரும் வெற்றி பெற்றது.

லண்டன் கான்ஃபிடன்ஷியல்

லண்டன் கான்ஃபிடன்ஷியல்

இதன் மூலம் தமிழ் உட்பட பல மொழி ரசிகர்களுக்கும் பரிட்சயமானார் மவுனி ராய். தொடர்ந்து படங்களிலும் நடித்து வருகிறார் மவுனி ராய். கடைசியாக அவர் நடித்த லண்டன் கான்ஃபிடன்ஷியல் என்ற திரைப்படம் ஜீ5 ஆன்லைன் தளத்தில் ரிலீஸானது.

பிறந்த நாள் வாழ்த்து

பிறந்த நாள் வாழ்த்து

தற்போது பிரம்மாஸ்த்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் மவுனி ராய். இந்நிலையில் நேற்று முன்தினம் நடிகை மவுனி ராய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தவறாக நன்றி

தவறாக நன்றி

தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நடிகை மவுனி ராய் நன்றி தெரிவித்தார். அப்படி நன்றி தெரிவிக்கும் போது தவறாக ஒரு டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு மரண ட்ரோலில் சிக்கியிருக்கிறார்.

அமைச்சருக்கு நன்றி..

அமைச்சருக்கு நன்றி..

அதாவது மீடியா பர்சனாலிட்டியான ராஜ் நாயக் என்பவர் நடிகை மவுனி ராய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். அவருக்கு நன்றி கூறுவதற்கு பதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டு நன்றி கூறியுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துள்ளனர்.

ஃபுல் போதையா?

ஃபுல் போதையா?

என்ன மவுனி ராய் மேடம் ஃபுல் போதையா? என்சிபி உங்களுடைய லொகேஷனை தேடிக்கொண்டிருக்கிறார்கள் என மரண பங்கம் செய்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து சொல்லும் அளவுக்கு நீங்கள் இன்னும் வளரவில்லை என்றும் கலாய்த்துள்ளனர்.

35வது பிறந்தநாள்

35வது பிறந்தநாள்

நடிகை மவுனி ராய் மாலத்தீவில் தனது நெருங்கிய நண்பர்களுடன் தனது 35வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். பிரபல பிரபலங்களான அனுஷ்கா ஷர்மா, ஏக்தா கபூர் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களான அர்ஜுன் பிஜ்லானி, ஆம்னா ஷெரீப், ஜியா முஸ்தபா, கரண் டேக்கர் மற்றும் பலர் இன்ஸ்டாகிராமில் நடிகை மவுனி ராய்க்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X