Just In
- 22 min ago
பீப் வசனங்களுடன்.. அமேசான் பிரைமில் அன்கட் வெர்ஷனாக வெளியாகும் விஜய்யின் மாஸ்டர்.. டிரைலர் இதோ!
- 53 min ago
இளைஞருக்கு முத்தம் கொடுக்க போன ஜூலி.. இவர்தான் உங்க காதலரா? கேப்ஷனை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ!
- 1 hr ago
100 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி 1000 ரூபாய்க்கு விற்கிறார்.. புஸ்ஸி ஆனந்த் மீது எஸ்.ஏ.சி புகார்!
- 2 hrs ago
காசு வந்தா காக்கா கூட மயிலா மாறிடுதே எப்புடி? பிக் பாஸ் பிரபலத்தை நக்கலடித்த நெட்டிசன் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் புதிய ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- News
பெங்களூரில் நிலையில்லாமல் பதிவாகும் கொரோனா பாதிப்பு... குழப்பத்தில் மருத்துவ நிபுணர்கள்!
- Lifestyle
பெண்கள் ப்ரா அணிந்துகொண்டு தூங்குவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா? உஷாரா இருங்க...!
- Sports
எனக்கா வாய்ப்பு கொடுக்கலை? வெளுத்து வாங்கிய தமிழக வீரர்.. சிஎஸ்கேவிற்கு அனுப்பிய தரமான மெசேஜ்
- Finance
தொடக்கத்திலேயே சரிவு தான்.. 48,000 கீழ் சென்ற சென்செக்ஸ்..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிவி நடிகருடன் பிரபல நடிகைக்கு திடீர் நிச்சயதார்த்தம்.. அடுத்த வருடம் திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து
சென்னை: பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைக்கு நடிகருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
பிரபல மலையாள நடிகை மிருதுளா விஜய். இவர் தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ள இவர், தொடர்ந்து டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.
பாலிவுட் ஹீரோவுடன்.. வெப் சீரிஸில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி.. மாஸ்டர் ஹீரோயினும் இருக்காராமே!

நட்பின் நூறாம் நாள்
தமிழில், செலிபிரிட்டி சினிமா சார்பில் டி.எஸ். வாசன் தயாரித்து கதாநாயகனாக நடித்த படம், ஜெனிபர் கருப்பையா. இதில் நாயகியாக நடித்திருந்தார் மிருதுளா விஜய். சரவண பாண்டியன் இயக்கி இருந்த இந்தப் படம், கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியானது. அதற்கு முன், ராஜா தேசிங்கு இயக்கத்தில் விஜய சிரஞ்சீவியின் நட்பின் நூறாம் நாள் என்ற படத்தில் நடித்திருந்தார்.

பிரிட்டீஷ் பங்களா
இதையடுத்து, கடன் அன்பை முறிக்கும் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படங்கள் பெரிதாகக் கவனிக்கப் படவில்லை. இதனால், மலையாளப் படங்களில் கவனம் செலுத்தினர். செலபிரேசன், பிரிட்டீஷ் பங்களா, இன்பினிட்டி, நெக்ஸ்ட், டோக்கர் நம்பர் பிளீஸ் ஆகிய படங்களில் அங்கு நடித்துள்ளார்.

பூக்காலம் வரவாயி
மிருதுளா சிறந்த நடனக் கலைஞரும் கூட. பாரியா, பூக்காலம் வரவாயி உட்பட சில டாப் தொடர்களின் மூலம் புகழ்பெற்றுள்ள அவர், சில மியூசிக் வீடியோவிலும் நடித்திருக்கிறார். இவருக்கும் மலையாள சின்னத்திரை நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

பொதுவான நண்பர்
இவர்களின் நிச்சயதார்த்தம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதையடுத்து இருவரும் தங்கள் திருமணத்தை அறிவித்துள்ளனர். அடுத்த வருடம் திருமணம் நடக்கிறது. இது காதல் திருமணம் இல்லை என்றும் இருவருக்கும் பொதுவான நண்பர் மூலம் இந்த திருமண ஏற்பாடு நடந்ததாகக் கூறப்படுகிறது.

சேச்சி, சேட்டா
இவர்கள் தங்கள் திருமணம் பற்றி வீடியோ மூலம் அறிவித்துள்ளனர். சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள், சேச்சி, சேட்டா என அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.