புடவை கட்டுவது ரொம்ப பிடிக்குமா?.. சீதா ராமம் நாயகி சொன்ன அழகின் சீக்ரெட்!

மும்பை : சீதாராமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மிருணாள் தாக்கூர் சேலை தான் பிடித்தமான உடை என தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பலமொழிகளில் வெளியான திரைப்படம் சீதாராமன். இப்படத்தில துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மிருணால் தாக்கூர்.

20 ஆண்டுகளுக்கு முன் ராணுவ வீரர் ஒருவர் தனது காதலிக்கு எழுதிய கடிதத்தை மீண்டும் அவரிடம் சேர்ப்பது இந்த படத்தின் மையக்கருவாகும். இப்படத்தில் தழைய தழைய புடவை கட்டிக்கொண்டு ரசிகர்களை சொக்க வைத்தார் மிருணாள் தாக்கூர்.

லக்மே ஃபேஷன் வீக்

லக்மே ஃபேஷன் வீக்

ஃபேஷன் டிசைன் கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் லக்மே ஃபேஷன் வீக் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு பேஷன் வீக் நிகழ்ச்சி மும்பையில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில், மிருணாள் தாக்கூர் மற்றும் டயானா பென்டி ஆகியோர் அலங்காரமான உடையில் மேடையை அலங்கரித்தனர்.

மிருணாள் தாக்கூர்

மிருணாள் தாக்கூர்

சீதா ராமம் படத்தில் சேலையில் நடந்து வந்த தேவதை மிருணாள் தாக்கூர் சிவப்பு நிற லெஹெங்காவில் ரோஜா பூ ஒன்று நடந்து வந்தது போல இருந்தது. அடிமேல் அடியெடுத்து வைத்து அனைவரின் விழிகளையும் விரிவைத்து உச்சுகொட்ட வைத்தார் மிருணாள் தாக்கூர். லக்மே பிராண்ட் தூதராகவும் இருக்கும் மிருணாள் தாக்கூர் சிவப்பு நிற லெஹங்காவுக்கு மேச்சாக பச்சை கல் பதித்த நெக்லஸ், அதற்கு ஏற்றார் போல கம்பல் அணிந்திருந்தார்.

புடவை அணிவதுதான் பிடிக்கும்

புடவை அணிவதுதான் பிடிக்கும்

பேஷன் நிகழ்ச்சி முடிந்ததும், பிலிமிபீட் சேனலுக்கு பேட்டி அளித்த மிருணாள் தாக்கூர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நினைத்து பெருமை அடைகிறேன். ரசிகர்களாகி உங்களால் , உங்கள் அன்பால் இது சாத்தியமானது. ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.மேலும் நான் இந்திய உடை அணிவதை பெரிதும் விரும்புகிறேன். இருந்தாலும், சில நேரம் எந்த உடை போடுவது என்பதில் குழப்பம் வரும் நேரத்தில், இந்திய பாரம்பரிய உடையான புடவையை தேர்வு செய்து சீதா ராமம் நாயகியாக மாறிவிடுவேன்.

யாரையும் பாலோ செய்யவில்லை

யாரையும் பாலோ செய்யவில்லை

இன்ஸ்டாகிராமில் யாரை பாலோ செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மிருணாள் தாக்கூர், நான் குழந்தைகள், பூக்கள், பூனைகள் மற்றும் நாய்களைப் பின்தொடர்கிறேன். குறிப்பிட்ட யாரையும் நான் பாலோ செய்யவில்லை, ஆனால் எனக்கு மகிழ்ச்சியான, மனதிற்கு பிடித்த பல விஷயங்களை நான் பாலோ செய்து வருகிறேன் என்றார்.

பல படங்களில்

பல படங்களில்

தற்போது, இவர் பிப்பா , பூஜா மேரி ஜான், ஆன்க் மிச்சோலி, கும்ரா ஆகிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவர் நடித்த சீதா ராமம் படம் மிதமான வெற்றிகளை பெற்றிருந்த போதிலும் இவருக்கு தெலுங்குலும் தமிழிலும் நல்ல ரசிகர் பட்டாளம் கிடைத்துள்ளது. ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்துக் கொள்ள அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X