மிருணாள் தாக்கூர் கைது.. டக்காயிட் பட புரமோஷனுக்காக கையில் விலங்குடன் வந்த நடிகை!

சென்னை: வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் நடிகை மிருணாள் தாக்கூர் குறித்து பல சர்ச்சைக்குரிய செய்திகள் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பரவி வரும் நிலையில், நடிகை மிருணாள் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஷானில் தியோ இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'டக்காயிட்' இந்த படம் ஏப்ரல் 10ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் அடிவிட் சேஷ், பிரகாஷ் ராஜ், காமாட்சி பாஸ்கர்லா, அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். படம் வெளியாக சில தினங்களே இருப்பதால் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை மிருணாள் தாக்கூர் வித்தியாசமாக ' கையில் விலங்குடன் வந்தார்.

Mrunal Thakur Arrest

நடிகை மிருணாள் தாக்கூர்: இதனால், நடிகை மிருணாள் தாக்கூர் கைது செய்யப்பட்டதாக தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. ஆனால் அது உண்மையல்ல என்றும், புரமோஷன் ஸ்டண்ட் என்பது தெரியவந்துள்ளது. மிருணாள் தாக்கூருடன் நடித்த அடிவி சேஷ் மற்றும் இயக்குநர் அனுராக் கஷ்யப் இருவரும் சேர்ந்து மிருணாள் தாக்கூரை அழைத்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக, மூவரும் போலீஸ் வாகனத்தில் வந்து இறங்கியதுடன், போலீசார் கைப்பிடியில் அழைத்துச் செல்லும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உண்மையில் மிருணணாளி தாக்கூர் கைது செய்யப்பட்டார் என்ற செய்திகள் வெளியாகி அவரது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. அதன் படக்குழு, இது முழுக்க முழுக்க பட புரமோஷனுக்காக செய்யப்பட்ட ஸ்டண்ட் என்பதை கூறினர். அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் வகையில் உருவாகி இருக்கும் 'Dacoit' திரைப்படம் ஏப்ரல் 10ந் தேதி தியேட்டரில் வெளியாகி உள்ளது,

வதந்தி : வளர்ந்து வரும் நடிகையான மிருணாளி தாக்கூர், துல்கர் சல்மானுடன் நடித்த சீதா ராமம் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். தற்போது இவர் இரண்டு இந்தி படத்திலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். மிருணாளி தமிழ் படத்தில் நடிக்காத போதும், நடிகர் தனுஷூனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வதந்தி பரவியதால், கோலிவுட்டிற்கும் தெரிந்த முகமாக மாறிவிட்டார்.
'

More from Filmibeat

Read more about: mrunal thakur arrest கைது
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X