என் செல்லப்பேரு ஆப்பிள்.. பாடலுக்கு ஆட்டம் போட்ட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்பேல்லாம் ஐட்டம் பாடலுக்கு என்றே டிஸ்கோ சாந்தி, அனுராதா, ஜோதி லட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா போன்ற நடிகர்கள் இருந்தார்கள். ஆனால், காலப்போக்கில் அவை மாறி, இப்போது, ஐட்டம் பாடலுக்கு நடிகைகளே ஒவர் கவர்ச்சி காட்டி டான்ஸ் ஆடத் தொடங்கிவிட்டார்கள். அப்படி அவர்கள் டான்ஸ் ஆடினாலும், சில நேரங்களில் அவை எடுபடாமல் போய்விடுகிறது.
ஒரு சிலர் ஒரு சில பாடத்தில் வந்து ஆட்டம் போட்டு இருந்தாலும், அவர்களை ரசிகர்கள் இன்றும் மறக்காமல் நினைவில் வைத்து இருக்கிறார்கள். அப்படி நம் மனதில பதிந்தவர் தான் நடிகை முமைத் கான். சில்க் ஸ்மிதாவால் ஈர்க்கப்பட்ட நடிகை முமைத் கான் 2002 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவின் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியதன் மூலமாக தான் சினிமா என்ட்ரியானார். தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து உள்ளார்.

என் பேரு மீனாகுமாரி: கமல்ஹாசன் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தில், நெருப்பே சிக்கி முக்கி நெருப்பே பாடலுக்கு சும்மா வளைந்து நெளிந்து ஆட்டம் போட்டு இருந்தார். அதன் விஜய் நடித்த போக்கிரி படத்தில், என் செல்லப்பேரு ஆப்பிள் நீ நைசா கடிச்சிக்கோ பாடலுக்கு நடனமாடி இருந்தார். இதையடுத்து, கந்தசாமி படத்தில், என் பேரு மீனாகுமாரி உள்பட பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். இவர் ஆடி பாட்டுக்கள் அனைத்து செம ஹிட்
படவாய்ப்பு இல்லை: ஐட்டம் டான்சராக மட்டும் இல்லாமல் இவர்,பிரசாந்த் நடித்த மம்முட்டியான், மறந்தேன் மன்னித்தேன், மருதமலை, வில்லு உள்ளிட்ட பல படங்களில் கௌரவ வேடங்களில் நடித்து உள்ளார். நடிகை முமைத் கானுக்கு கடந்த சில வருடங்களாக சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போனது. இந்த நேரத்தில் தான்,போதை பொருள் கடத்தல் வழக்கில் இவரது பெயர் அடிபட்டு சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.
எப்படி இருக்கிறார்: படமும் இல்லை, போதை பொருள் சர்ச்சையில் சிக்கிய முமைத் கான் மன உளைச்சலால் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். திரைப்படங்களில் தென்படாத முமைத் கான் அவ்வப்போது தனது ரசிகர்களை குஷிப்படுத்த தாறுமாறாக கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் முமைத் கான்
பார்ப்பதற்கு முன்பு போலவே இருக்கிறார். இதைப்பார்த்த நம் ரசிகர்கள் மீண்டும் தமிழக்கு வாங்க என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











