‘மீனா குமாரி‘ முமைத்கானுக்கு இன்று பிறந்தநாள்.. பிரபலங்கள் வாழ்த்து !

மும்பை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களுக்கு கவர்ச்சி நடனம் ஆடி மகிழ்வித்து வந்த முமைத்கான் ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் வந்து அசத்தியுள்ளார்.

Recommended Video

பியா பாஜ்பாய் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தால் சிக்கல்- வீடியோ

போக்கிரி, வில்லு, கந்தசாமி உள்ளிட்ட திரைப்படங்களில் வரும் குத்து பாடல்களுக்கு நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர்.

இந்நிலையில் செப்டம்பர் 1ந் தேதியான இன்று முமைத் கான் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கவர்ச்சி நடனமாடி

கவர்ச்சி நடனமாடி

ஹிந்தி திரைப்படங்கள் மூலம் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த முமைத்கான் இன்று தமிழ் தெலுங்கு கன்னடம் எனப் பல இந்திய மொழிகளில் நடித்தும், பல்வேறு திரைப்படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சி நடனமாடியும் ரசிகர்களை குதூகலிக்க வைத்து வருகிறார்.

ஐட்டம் டான்சராக

ஐட்டம் டான்சராக

கந்தசாமி திரைப்படத்தில் வரும் என் பேரு மீனாகுமாரி, போக்கிரி படத்தில் வரும் என் செல்லப்பேரு ஆப்பிள் மற்றும் வில்லு திரைப்படத்தில் வரும் டாடி மம்மி வீட்டில் இல்ல உள்ளிட்ட பல பாடல்களில் விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி தமிழ் நடிகர்களுடன் ஐட்டம் டான்சராக நடனத்தில் பட்டையை கிளப்பி இருக்கும் முமைத்கான் ரசிகர்களை மகிழ்வித்ததோடு இன்று வரை பிரபலமாக இருந்து வருகிறார்.

படங்களில் குத்தாட்டம்

படங்களில் குத்தாட்டம்

இவ்வாறு கவர்ச்சி நடனத்தின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கலங்கடித்து வரும் முமைத்கான் தெலுங்கு திரைப்படத்திலும் மகேஷ்பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததோடு பல படங்களில் குத்தாட்டம் போட்டுள்ளார்.

கோமா நிலைக்கு

கோமா நிலைக்கு

தெலுங்கு தமிழ் ஹிந்தி என தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்த முமைத்கான் 2016 ஆம் ஆண்டு வீட்டில் தூக்கத்தில் படுக்கையில் இருந்து கீழே விழுந்து தலையில் பலமாக அடிபட்டு பின் கோமா நிலைக்கு சென்றார்.

மிகத்தீவிரமாக தயாராகி

மிகத்தீவிரமாக தயாராகி

இரண்டு வருட போராட்டத்திற்கு பிறகு கோமா நிலையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய முமைத்கான், மீண்டும் திரைப்படங்களில் நடிக்கவும் நடனமாடவும் மிகத்தீவிரமாக தயாராகிக் கொண்டு வருகிறார்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

இவ்வாறு திரைப்படங்களில் பல்வேறு குத்துப் பாடல்களின் மூலம் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி வந்த நடிகை முமைத்கான் செப்டம்பர் 1ம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X