Actress Mumtaj: பாவம் செய்த கண்.. ஆடிய கால்.. மெக்காவில் கதறி அழுத மும்தாஜ்!

சென்னை: ஒரு காலகட்டத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கிளாமர் நடிகையாக வலம் வந்த நடிகை மும்தாஜ், இன்று ஆன்மீகவாதியாக மாறி உள்ளார். தற்போது ஹஜ் புனிதப்பயணம் சென்றுள்ள மும்தாஜ், மெக்காவில் இருந்து கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

டி. ராஜேந்தரின் இயக்கிய மோனிஷா என் மோனலிசா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மும்தாஜ். பள்ளி செல்லும் காலத்தில் இருந்தே அவருக்கு நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்ததால், அப்போதில் இருந்தே சினிமாவில் நடிக்க முயற்சி எடுத்தார். இதையடுத்து, 1999ம் ஆண்டு 'மோனிஷா என் மோனலிசா'படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் வெற்றிப்பெறவில்லை. இருந்தாலும் மும்தாஜுக்கு பட வாய்ப்புகள் வந்தன.

Mumtaj Vijay

நடிகை மும்தாஜ்: ஒரு சில படத்தில் நடித்து வந்த மும்தாஜ், 'குஷி' 'கட்டிப்புடி கட்டிப்புடி டா' என்ற பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு தமிழ் ஆடியன் மனதில் பதிந்தார். குஷி படத்திற்கு பிறகு பிஸியான நடிகையாக தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வலம் வந்தார். அதே சமயத்தில் பல படத்திலும் ஐட்டம் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையவே சினிமாவில் இருந்து விலகினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில்: அதன் பின் விஜய்டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்க பின் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட மும்தாஜ். புர்காவில் மட்டுமே காணப்படுகிறார். அண்மையில் பேட்டி அளித்த மும்தாஜ், அல்லா என் வாழ்க்கை மாற்றி விட்டார். அல்லாவைத்தவிர எனக்கு எதுவும் தேவை இல்லை என்று பேசி இருந்தார். 44 வயதாகும் மும்தாஜ் இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கிறார்.

புதிதாக பிறந்த குழந்தை: இந்நிலையில் ,ஹஜ் புனித பயணம் சென்றுள்ள மும்தாஜ், மெக்காவில் கண்ணீர் மல்க கதறும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த முறை வந்தது போலவே இந்த முறையும் நான் மெக்காவிற்கு அல்லாவின் அருளால் நான் மீண்டும் வந்து இருக்கிறேன். இந்த உலகம் என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், அல்லாவின் பார்வையில் நான் புதிதாக பிறந்த குழந்தையைப் போல புனிதமானவளாக உணர்கிறேன். நீங்களும் மெக்காவின் இந்த அழகையும், அமைதியையும் பாருங்கள், இந்த உலகத்தை பற்றி கவலைப்படாமல் அல்லாவை நினைத்து வழிப்படுங்கள்.

பாவம் செய்த கண்: பாவம் செய்த கண் மெக்காவை பார்த்துவிட்டது, ஆடுனா கால், புனிதமான இந்த காபாவில் நடந்து விட்டது. என்னால் இதை செய்ய முடியும் போது, உங்களாலும் இதை செய்ய முடியும். நல்ல வாழ்க்கைக்காக இறைவனை வேண்டுங்கள். எதற்காகவும் யாருக்காவும் மன உறுதியை விட்டு விடாதீர்கள்.அல்லா உங்களுக்கு என்றும் துணை இருப்பார் என்று நடிகை மும்தாஜ் கண்ணீர் மல்க பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வீடியோ பார்த்த பலரும் அல்லாவின் ஆசி உங்களுக்கு நிச்சயம் உண்டு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X