குஷியில் பார்த்த அதே முகம்..மாறவே இல்லையே..புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

சென்னை: குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை மும்தாஜ். பொதுவாகவே கவர்ச்சியை விரும்பும் நடிகைகளுக்கு மத்தியில், அழகான சேலையில் பளிச்சென்று இருக்கிறார் மும்தாஜும் ஒருவர் .

Recommended Video

Kushi Tamil movie explained | Vijay |Jyothika |S.J.Suryah

தனது கவர்ச்சியினாலும், அழகான பேச்சாலும், கிக்கான பார்வையினாலும் எப்போதுமே ஈர்ப்பார், சினிமாவில் கிளாமராக நடித்தாலும் சமூகவலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகாகவும் அம்சமாகவும் தான் இருக்கிறது.

சாக்லேட் படத்தில் வரும் மல மல மருதமலை என்ற பாடலில் ஒரு டவலை கையில் வைத்து கொண்டு அவர் ஆடின ஆட்டம் யாராலும் மறக்க முடியாது. அப்படிப்பட்ட மும்தாஜ் சமூகவலைத்தளத்தில் மிகவும் அமைதியாக, குடும்பப்பாங்கான புகைப்படங்களையே வெளியிட்டு வருகிறார்.

லக்ஸ் பாப்பா

லக்ஸ் பாப்பா

ஏழுமலை படத்தில் சிம்ரனுக்கு தங்கையாக வரும் மும்தாஜ் படம் முழுவதும் கச்சிதமான கவர்ச்சியை காட்டி இருப்பார். லக்ஸ் பாப்பா என்ற பாடலுக்கு அர்ஜூனுடன் அவர் ஆடிய ஆட்டமும் யாராலும் மறக்க முடியாது. பல படங்கள் அவரது கவர்ச்சிகாவவே கல்லா கட்டியதும் நிதர்சனமான உண்மை . இவர் நடிக்கும் எல்லா படங்களிலும் ஹீரோயின்களுக்கு நிகரான கதாபாத்திரம் அவருக்கு எப்போதும் கிடைக்கின்றது.

கட்டிப்புடி கட்டிப்புடிடா

கட்டிப்புடி கட்டிப்புடிடா

குஷி படத்தில் ஜோதிகாவை எந்த அளவுக்கு ரசிகர்கள் பார்த்தார்களோ அதே அளவிற்கு மும்தாஜின் கிறங்கடிக்கும் கொஞ்சும் தமிழையும் ரசித்தார்கள். கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற ஒரு பாடலுக்கும் பலர் அடிமையானார்கள். குஷி படம் வெளிவந்து அன்று முதல் இன்று வரை கட்டிப்புடிடா பாடலை தொலைக்காட்சியில் போட்டாலே ரசிக்காதவர்களே இல்லை. அந்த பாடலுக்கு எப்போதுமே ஒரு தனி மவுசு தான்.

முன்னிலை

முன்னிலை

பல கவர்ச்சியான படங்கள் மட்டுமல்லாமல் பல முன்னணி ஹீரோக்களுடனும் இவர் நடித்திருக்கிறார் .பெரும்பாலும் இவர் நடித்த, நடனமாடின அனைத்து பாடல்களுமே மெகா ஹிட் தான் . பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் வந்தாலும் அதுவும் நல்ல பெயரையே அவருக்கு பெற்று தந்தது.விவேக்குடன் சேர்ந்து பல படங்களில் காமெடி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

அளவான கவர்ச்சி

அளவான கவர்ச்சி

இந்த ஊரடங்கு சமயத்தில் பல கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் பல ஹீரோயின்களுக்கு மத்தியில் சினிமாவில் கவர்ச்சியாக நடிக்கும் மும்தாஜ் தனது இணையதளபக்கத்தில் மிகவும் குடும்பப்பாங்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்துள்ளார். அதை பார்த்த ரசிகர்களும் பலப்பல அழகான கமெண்ட்ஸ்கலையே பதிவிட்டு வருகின்றனர்.

பாகுபாடு இல்லை

பாகுபாடு இல்லை

ஹீரோ,ஹீரோயின்களின் அக்கா தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் ,வந்த வாய்ப்பை தவறவிடாமல், தனது பங்கை கச்சிதமாகவே நடித்து கொடுப்பதில் இவருக்கு என்று ஒரு தனி பெயர் எப்போதும் உண்டு. பல பாலிவுட் நடிகைகள் கிளாமராக நடித்தாலும் மும்தாஜ்க்கு இருக்கும் மவுசு எப்போதுமே தனி தான் .நீங்க எப்படி இவ்ளோ அழகாயிருக்கீங்க போன்ற பல கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளது .

பப்ளி ஹீரோயின்

பப்ளி ஹீரோயின்

மிகவும் ஒல்லியான ஹீரோயின்களுக்கு மத்தியில் கொஞ்சம் பப்ளி ஹீரோயின்களுக்கும் சினிமாவில் முக்கிய பங்கு உண்டு என்பதை நிரூபித்திருக்கிறார் மும்தாஜ். அனைத்து ஹீரோயின்களும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு விளம்பரம் தேடும் இந்த ஊரடங்கு சமயத்தில் தனது அழகான, புகைப்படங்களை வெளியிட்டு தனித்துவமாகவே தெரிகிறார் மும்தாஜ். இவரது அடுத்த படத்திற்காக அவரது ரசிகர்களும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X