வயித்துல பிள்ளைய வச்சுக்கிட்டு என்னா ஆட்டம்.. வைரலாகும் நம்ம வீட்டுப்பிள்ளை நடிகையின் காட்டுப்பயலே!
சென்னை: நிறைமாத கர்ப்பிணியான நடிகை மைனா நந்தினி காட்டுப்பயலே பாடலுக்கு நடனமாடிய வீடியே வைரலாகி வருகிறது.
Recommended Video
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை நந்தினி.
அதில் மைனா என்ற கேரக்டரில் குறும்பு பெண்ணாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

பட வாய்ப்பு
அந்த சீரியலுக்கு பிறகு மைனா நந்தினி என்று அழைக்கப்பட்டு வருகிறார். பல சீரியல்களில் நடித்த நந்தினியின் திறமைக்கு பரிசாக பல படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வம்சம், ராஜா ராணி, தர்மபிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நம்ம வீட்டுப் பிள்ளை
கடைசியாக பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் நடித்திருந்தார் நந்தினி.
ஏற்கனவே கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் நந்தினி. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் நந்தினி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார்.

இரண்டாவது திருமணம்
இதனை தொடர்ந்து நந்தினியின் கணவர் கார்த்திகேயன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.

வளையகாப்பு
இந்நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ள மைனா நந்தினிக்கு கடந்த 24ஆம் தேதி வளைகாப்பு நடைபெற்றது. வளையகாப்பு முடிந்தவுடன் தனது கணவருடன் சேர்ந்து எடுத்த செல்பியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் நந்தினி.

ரசிகர்கள் வாழ்த்து
மேலும் குட்டி யோகேஷ் அல்லது குட்டி நந்தினிக்காக காத்திருப்பதாகவும் லவ் யு பாப்பா என்றும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை மைனா நந்தினிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

காட்டுப்பயலே பாடலுக்கு
இந்நிலையில் நடிகை மைனா நந்தினி அதே கெட்டப்பில் ஆட்டம் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது அதே கெட்டப்பில் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள காட்டுப்பயலே பாடலுக்கு நின்றப்படி செம குத்து குத்தியுள்ளார்.

அள்ளும் லைக்ஸ்
அவர் அலுங்கி குலுங்கி ஆடா விட்டாலும் வயிற்றில் பிள்ளையை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் என கிண்டலடித்துள்ளனர் நெட்டிசன்கள். சிலர் செம க்யூட் ரியாகஷன்ஸ் என புகழ்ந்துள்ளனர். அவரது இந்த வீடியோ 56 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











