பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியாகும் மைனா நந்தினி..இனிமேதான் தரமான சம்பவங்களை பாக்க போறீங்க!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகை மைனா நந்தினி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் ஆடல், பாடல் என மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதில் ஜிபி முத்து, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டன்,ஆயிஷா, ராம் ராமசாமி, குயின்ஸி, விஜே கதிரவன், மெட்லி ஒலி சாந்தி, ஷிவின் கணேஷன், தனலட்சுமி, விஜே மகேஷ்வரி, அமுதவாணன், விக்ரமன், ஜனனி, மாடல் நிவாஷினி, அசர் கோளார் என 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

நடிகை மைனா நந்தினி

நடிகை மைனா நந்தினி

இந்த சீசனில் நடிகை மைனா நந்தினி பெயர் கடைசி பட்டியலிலும் இடம் பெற்று இருந்ததால், இந்த நிகழ்ச்சியில் கட்டாயம் அவர் கலந்து கொள்வார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தன.ஆனால், மைனா நந்தினி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் வைல்டு கார்டு மூலம் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுப்பார் என கூறப்பட்டது.

சர்ப்ரைஸ் என்ட்ரி

சர்ப்ரைஸ் என்ட்ரி

இந்நிலையில்,நடிகை மைதா நந்தினி இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து இமாத் தனது ட்விட்டர் பக்கத்தில், பறந்து சென்ற பறவை மீண்டும் இறைதேடி வீட்டிற்குள்... மீண்டும் மைனா வீட்டிற்குள் என ட்வீட் போட்டுள்ளார். ஜனனிக்கும் மைனாவுக்கும் வந்த சண்டையினால் தான் மைதா நந்தினி கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது.ஏற்கனவே நிகழ்ச்சி அனல் பறக்க போய் கொண்டிருக்கும் நிலையில், இனி மேல் நடக்கப்போகும் தரமான சம்பவங்களை பார்க்க ரசிகர்கள் ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர்.

சரவணன் மீனாட்சி தொடரில்

சரவணன் மீனாட்சி தொடரில்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி படத்தில் சூரியின் மனைவியாக ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார் மைனா. இதையடுத்து சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்கிற காமெடி ரோலில் நடித்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு நல்ல பெற்றுதந்ததோடு மைனா என்பது இவரின் அடையாளமாகவே மாறிவிட்டது.

படங்களில் பிஸி

படங்களில் பிஸி

தற்போது விஜய் டிவியின் ஆஸ்தான முகங்களில் ஒருவராக வலம் வரும் மைனா நந்தினி, தற்போது திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் இவரும் ஒருவராக நடித்திருந்தார். இதுதவிர மற்ற சில படங்களிலும்,விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X