twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அந்த வார்த்தையை சொல்லாதீர்கள்.. எல்லாருக்கும் நடக்கும்.. சித்ரா மரணத்தால் கொந்தளிக்கும் பிரபல நடிகை!

    |

    சென்னை: நடிகை சித்ரா மரணம் தொடர்பாக நடிகை மைனா நந்தினி ஷேர் செய்துள்ள பதிவு வைரலாகி வருகிறது.

    பிரபல விஜேவும் சின்னத்திரை நடிகையுமான சித்ரா கடந்த 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டை அருகே உள்ள ஸ்டார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது மரணம் தொடர்பாக அவரின் கணவரான ஹேமந்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

     'மீண்டும் காதலில்.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா?' நடிகை வனிதாவின் திடீர் பதிவால் பரபரப்பு! 'மீண்டும் காதலில்.. இப்போ உங்களுக்கு சந்தோஷமா?' நடிகை வனிதாவின் திடீர் பதிவால் பரபரப்பு!

    உருக்கமான பதிவு

    உருக்கமான பதிவு

    சித்ரா மரணம் தொடர்பாக நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக அவரது தோழியும் நடிகையுமான மைனா நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

    தேவையில்லாத குற்றச்சாட்டு

    தேவையில்லாத குற்றச்சாட்டு

    அதில் அவர் கூறியிருப்பதாவது, 'மீடியா என்றால் இப்படித்தான்' ஏன் இந்த வாக்கியம்?? இந்த தேவையில்லாத குற்றச்சாட்டை தயவு செய்து நிறுத்துங்கள். ப்ளீஸ் நிறுத்துங்கள். ஒருவரது தொழிலை வைத்து அவரை எடைபோட வேண்டாம் ஒரு மனிதனாக மனிதனை மதியுங்கள்.

    தனிப்பட்ட வலி

    தனிப்பட்ட வலி

    மன அழுத்தம் மனச்சோர்வு எல்லாம் மீடியாவில் இருக்கும் நபர்கள் மட்டும் எதிர்கொள்ளும் பிரச்சினை கிடையாது. இது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு விஷயம்தான் அனைவருக்கும் அவர்களின் வாழ்க்கையில் தனிப்பட்ட வலி போராட்டங்கள், அழுத்தங்கள் இருக்கும்.

    கொல்லாதீர்கள்..

    கொல்லாதீர்கள்..

    அதனால் ஒருவர் தொழிலை வைத்து அவர்களை காயப்படுத்தாதீர்கள். அவர்கள் என்ன எதிர்கொள்கிறார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால் இந்த சமூகத்தில் இருக்கும் வார்த்தைகளை நம்பி ஒருவரைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி கொல்லாதீர்கள்.

    Recommended Video

    Kathir Mullai Romance தான் காரணம் | Hemanth யிடம் RDO விசாரனை - Filmibeat Tamil
    வாழ விடுங்கள்

    வாழ விடுங்கள்

    உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள். மற்றவர்களின் வாழ்க்கையை வாழ விடுங்கள் #stopjudging #stopkillingdreams என உருக்கமாகவும் வேதனையாகவும் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actress Myna Nandhini has shared heartfelt post about Chithra's demise. She is requesting people to do not judge a person with their profession.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X