Myna Nandhini :முதல் பேமிலி போட்டோஷுட்டை எடுத்த மைனா நந்தினி.. நல்லாதான் இருக்கு!

சென்னை : நடிகை மைனா நந்தினி, அடுத்தடுத்த சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், சினிமா என பிசியாக செயல்பட்டு வருகிறார்.

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர் மைனா நந்தினி. இந்த தொடரில் இவரது மைனா என்ற கேரக்டர் இவரது பெயருடன் ஒட்டிக் கொண்டது.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மைனா நந்தினி, இறுதிச்சுற்றுக்கு முன்பே நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

Actress Myna nandhini shares her first family photoshoot in Instagram

மைனா நந்தினியின் முதல் பேமிலி போட்டோஷுட் :

நடிகை மைனா நந்தினி, விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்தத் தொடரில் இவர் ஏற்று நடித்த, மைனா என்ற கேரக்டர் ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டதில், இவரது பெயருக்கு முன்பும் அந்தப் பெயர் இணைந்துக் கொண்டது. சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், பிக்பாஸ் என அடுத்தடுத்த ஷோக்களில் இவரை தனியாகவும் தன்னுடைய கணவருடனும் காண முடிகிறது.

தொடர்ந்து ஜீ தமிழ் நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, கலக்கப் போவது யாரு, பிக்பாஸ் என அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்று சிறப்பான செயல்பாட்டை அளித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 104 நாட்கள் இவர் பிக்பாஸ் வீட்டில் தாக்கு பிடித்தார். இவரது அடுத்தடுத்த வீடியோக்கள், ரீல்ஸ், சுற்றுலா புகைப்படங்கள் ஆகியவற்றால் கவரப்பட்டு இவரை 7.4 மில்லியன் பாலோயர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

Actress Myna nandhini shares her first family photoshoot in Instagram

இதனிடையே இவரது யூடியூப் சேனலிலும் தற்போது ஒரு மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் கிடைத்த நிலையில், அதை கொண்டாடும் வகையில், சாலையோரங்களில் வசித்துவருபவர்களுக்கு உணவு கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனிடையே கடந்த மாதத்தில் தன்னுடைய குடும்பத்தினருடன் தாய்லாந்தின் பட்டாயா சிட்டி என்ற பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார். இந்த விசிட்டின்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட ஏராளமான ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி தெளித்தனர்.

இதனிடையே, முதல் முறையாக தன்னுடைய குடும்பத்தின் போட்டோஷுட்டை எடுத்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் இணைந்து ஸ்டைலிஷ் லுக்கில் தான் எடுத்துக் கொண்டுள்ள பேமிலி புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். கணவரும் மகனும் ஒரே வண்ணத்தில் ஆடை அணிந்திருக்க, மைனா நந்தினி மட்டும் அவர்களில் இருந்து வித்தியாசப்பட்டு உடை அணிந்திருந்தது அந்தப் புகைப்படங்களுக்கு அழகான வண்ணத்தை கொடுத்திருந்தது.

Actress Myna nandhini shares her first family photoshoot in Instagram

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மைனா நந்தினியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு குட்டி, நாயை அவரது கணவர் பரிசாக கொடுத்திருந்தார். இந்த வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்த நிலையில், ஏராளமான ரசிகர்களை கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களை இந்த வீடியோ பெற்றிருந்தது. ஏராளமான வாழ்த்துக்களையும் மைனா பெற்றிருந்தார். இவரது அடுத்தடுத்த ரீல்ஸ் வீடியோக்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X