மறக்க முடியாத உரையாடல்.. மறக்க முடியாத நண்பர்கள்.. போட்டோ போட்ட நதியா!
சென்னை : நடிகை நதியா தனது ட்விட்டர் பக்கத்தில் பழைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
80களின் மத்தியில் ராதா, அம்பிகா, ராதிகா, ரேவதி என பல நடிகைகளுக்கு அழகிலும் திறமையிலும் கடும் போட்டியான புதுவரவாய் வந்திறங்கியவர் நதியா. இவரது உண்மையான பெயர், சரீனா மொய்டு என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
புகழ் பெற்ற மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய பூவே பூச்சூடவா படத்தில் நதியா அறிமுகமானார். மலையாளத்தில் வெளிவந்த ' நோக்கத்தாதூரத்து கண்ணும் நட்டு' எனும் மலையாள படத்தின் ரீமேக் தான் பூவே பூச்சூடவா.

வரிசையாக ஹிட் படங்கள்
இந்த மலையாள படத்திலும் நதியாவே கதாநாயகி. இப்படத்தின் மூலம் 1984 ஆண்டில் மலையாளத்தின் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் முதல் படத்திலேயே பெற்றார். பூவே பூச்சசூடவாவிற்கு பிறகு நதியாவின் மார்க்கெட் ஒரே ஏறுமுகம்தான். மந்திர புன்னகை, உயிரே உனக்காக, நிலவே மலரே, சின்னத்தம்பி பெரிய தம்பி, மங்கை ஒரு கங்கை,ராஜாதி ராஜா என வரிசையாக ஒரு டஜன் ஹிட் படங்களை தந்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தார்.

நதியா பேஷன்
பெண்கள் நதியாவின் பேஷன் சென்ஸிற்காக வெறிகொண்ட ரசிகைகளாக இருந்தார்கள். நதியா கம்மல், நதியா டிரெஸ் என ஆரம்பித்து நதியா கொண்டை வரை இவரின் பெயரை இணைத்து விற்பனையில் சக்கைப்போடு போட்டது. ஆம் அப்பிடி ஒரு வரவேற்பை பெற்ற நடிகை வேறு யாருமல்ல. ஒரு நடிகையின் பெயரை வைத்தே, பல காஸ்மெட்டிக் பொருட்களை விற்றார்கள்.

அமெரிக்காவில் செட்டில்
1988ம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் நதியா. இவருக்கு, சனம், ஜனா என்ற இரண்டு மகள் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட நதியா, தன் இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைபார்த்த ரசிகர்கள்கூட நதியாவிற்கு இவ்வளவு வளர்ந்த மகள்களா என்று 1988ம் ஆண்டு சிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் நதியா. இவருக்கு, சனம், ஜனா என்ற இரண்டு மகள் இருக்கிறார்கள். சமீபத்தில் கூட நதியா, தன் இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைபார்த்த ரசிகர்கள்கூட நதியாவிற்கு இவ்வளவு வளர்ந்த மகள்களா என்று வாய் பிளந்தனர். வாய் பிளந்தனர்.

செகண்ட் இன்னிங்க்ஸ்
2004ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ,' M.குமரன் s/o மஹாலக்ஷ்மி' என்ற படத்தில் தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கினார். 80களில் பார்த்ததை போல் அப்படியே இளமை மாறாமல் நதியா இருப்பதை கண்டு பலர் ஷாக் ஆயினர். அன்றைய பத்திரிக்கைகளும் நதியா, ஜெயம் ரவியின் அம்மாவா இல்லை அக்காவா எனும் ரேஞ்சுக்கு விமர்சனம் எழுதின.

மறக்க முடியாத நண்பர்கள்
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நதியா, தெலுங்கு சினிமாவான மிர்ச்சி படத்தில் வேலை செய்ததை நினைவு கூர்ந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில், பிரபாஸ் அனுஷ்கா, சத்யராஜும் இருக்கிறார். மிர்ச்சி படக்குழு மிக அருமையான டீம் என்றும், டார்லிங் பிரபாஸுடன் நடித்தது மிக சந்தோசம் என்று கூறி இருந்தார். மேலும், மறக்க முடியாத உரையாடல்கள் , மறக்க முடியாத நண்பர்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.


Click it and Unblock the Notifications











