Actress Nadhiya: நான் வேறு மதம்.. அவர் வேறு மதம்.. நடிகை நதியாவின் சுவாரசியமான காதல் கதை!

சென்னை: இன்றும் அதே அழகுடன் எவர்கிரீன் நடிகையாக இருக்கும் நடிகை நதியா தனது காதல் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

நோக்கேத தூரத்து கண்ணும் நாட்டு எனும் மலையாளம் படம் மூலம் 1984ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா.

Actress Nadhiya shared her interesting love story and family life

தொடர்ந்து சில மலையாளப் படங்களில் நடித்த நதியா 1985ம் ஆண்டு தமிழில் வெளியான பூவே பூச்சுடுவா படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார்.

நடிகை நதியா: 80களில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை நதியா இன்றளவும் அதே பொலிவு மாறாமல் எவர்க்ரீன் பியூட்டியாகவே வலம் வருகிறார். நடிகர் மோகன் உடன் பாடு நிலாவே, சத்யராஜ், பிரபுதேவாவுடன் சின்ன தம்பி பெரிய தம்பி, ரஜினிகாந்த் உடன் ராஜாதி ராஜா என தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

Actress Nadhiya shared her interesting love story and family life

செகண்ட் இன்னிங்ஸ்: ஹீரோயினாக பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்த நதியா செகண்ட் இன்னிங்ஸாக 2004ம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் எம் குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி படத்தில் அம்மா ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வருகிறார். அண்மையில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவானா நடித்த LGM படத்திலும் நதியா நடித்திருந்தார்.

காதல் கதை: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள நதியா, தனது காதல் கதை பற்றி கூறியுள்ளார். அதில், நான் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே என்னுடைய கணவரை தெரியும், அவர் எனது வீட்டின் அருகில் தான் இருந்தார்.முதலில் நண்பர்களாகத்தான் இருந்தோம், பின் அது காதலாக மாறியது. எனக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்து நான் படங்களில் நடிக்க வந்துவிட்டேன். அவர் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருந்தார்.

Actress Nadhiya shared her interesting love story and family life

லவ் லெட்டர்: அந்த காலத்தில் போன் இல்லாததால், லெட்டர் தான் எழுதுவார் அந்த லெட்டர் அம்மா கையில் மாட்டிக்கொண்ட பின் தான் எங்கள் காதல் விஷயம் எங்கள் வீட்டுக்கு தெரிந்தது. அப்போது என் அப்பா, அவருக்கு வேலை கிடைக்கட்டும் என்று சொன்னார். இதனால், அவருக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று காத்துக்கொண்டு இருந்தேன்.

நான் வேறு மதம்..அவர் வேறு மதம்:அப்போது, நான் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தததால், என் கணவர் என்னால் குடும்பத்தை நடத்த முடியுமா என்று கேட்டார். நானும், முடியும் என்றேன், அவருக்கு வேலை கிடைத்ததும் கையில் காசுக்கூட இல்லாமல் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். நான் வேறு மதம். அவர் வேறு மதம். எப்படி எங்களுக்குள் ஒத்துவரும் என்று பெற்றோர் கவலைப்பட்டனர். எனது பெற்றோர் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். அதனால் எங்களுடைய காதலுக்கும் கிரீன் சிக்னல் கொடுத்தார்கள் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X