நதியா பகிர்ந்த மறக்க முடியாத புகைப்படம் .. ரசித்து பார்த்த ரசிகர்கள்!
சென்னை : அன்று முதல் இன்று வரை இளமை மாறாமல், அப்போ பாத்த மாதிரியே இப்பயும் இருக்கிங்க எப்படி மேடம் என நடிகை நதியாவிடம் கேட்காத ஆளில்லை.
Recommended Video
அந்த அளவுக்கு என்றும் இளமையுடன் திரையுலகில் உலா வரும் நடிகை நதியா, கவர்ச்சி இல்லாத நடிப்பின் மூலம் தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இன்றுவரை திரையுலகில் வெற்றி வலம் வருகிறார்.
இந்நிலையில் நதியா மற்றும் நடிகர் சுரேஷ் ஒன்றிணைந்து பல திரைப்படங்களில் நடித்த நிலையில் அனைத்தும் மிகப் பிரபலமாக பேசப்பட்டு ரசிகர்களின் பாராட்டு மழையில் மிதந்தது. இந்நிலையில் நதியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதல்முறையாக வெளியிட்ட அந்த ஃபேவரிட் புகைப்படம் ஒன்று லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி வருகிறது.

கவர்ச்சி இல்லாத நடிப்பு
அனைவருக்கும் பிடித்த அழகிய தோற்றம், கவர்ச்சி இல்லாத நடிப்பு, என்றும் இளமையான தித்திக்கும் சிரிப்பு என ரசிகர்களின் நெஞ்சங்களில் இன்றுவரை எவர்கிரீன் ஃபேவரிட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நதியா.

பெயர் சொல்லும்
மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்த நடிகை நதியா, தமிழில் இன்று வரை பெயர் சொல்லும் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அம்மா கதாபாத்திரத்தில்
ராஜகுமாரன் திரைப்படத்திற்குப் பிறகு சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நதியா எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார். எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த நதியா, அதைத் தொடர்ந்து தாமிரபரணி, சண்டை, மிர்ச்சி உள்ளிட்ட பல திரைப்படங்கள் நடித்து தற்பொழுது மிக பிஸியாக தமிழ், தெலுங்கு, மலையாளம் என தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

இன்று வரை பிரபலமாக
இவரின் நடிப்பில் வெளியான பூவே பூச்சூடவா, பாடு நிலாவே, ராஜாதி ராஜா உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்கள் இன்று வரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. மேலும் நதியா மற்றும் சுரேஷ் இணைந்து நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றதோடு சிறந்த ஜோடி என ரசிகர்களால் புகழப்பட்டதோடு பாராட்டுகளையும் பெற்றும் வந்தது.

சுரேஷ் உடன் இணைந்து
பூக்களை பறிக்காதீர்கள், மங்கை ஒரு கங்கை, உனக்காகவே வாழ்கிறேன் என பல திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இயக்குனர் அழகப்பன் இயக்கத்தில் "பூக்களை பறிக்காதீர்கள்" என்ற திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக நதியா மற்றும் சுரேஷ் இணைந்து நடித்த நிலையில் இத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, டி.ராஜேந்தர் இசை அமைத்து இருந்த இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பரவி சூப்பர் ஹிட்டானது.

அரிய புகைப்படம்
இந்நிலையில் லாக்டவுனில் ஆரம்பகால திரைப்படங்களில் எடுக்கப்பட்ட பல நாஷ்டாலஜிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாந்த நதியா, இப்பொழுது சுரேஷுடன் இணைந்து நடித்திருந்த பூக்களை பறிக்காதீர்கள் திரைப்படத்தில் வரும் "சோலைகளெல்லாம் பூக்களே" பாடல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு அதில் இதை சுரேஷ் மற்றும் இயக்குனர் அழகப்பன் உடன் முதல் முறையாக இணைந்து நடித்த அனுபவத்தை பகிர்ந்து சிலாகித்து கொண்டார்.

நதியாவை வர்ணித்த
இந்த பதிவை பார்த்த நதியாவின் ரசிகர்கள் நீங்கள் அப்போது பார்த்தது போலவே இப்போதும் அதே இளமையுடன் இருக்கின்றீர்கள் என்று நதியாவை வர்ணித்தவாறு, லைக்குகளையும் கமெண்ட்களையும் தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











