ரஜினியுடன் அந்தப் படத்தில் நடித்து 33 வருஷம் ஆச்சு.. பழைய போட்டோக்களை பகிர்ந்த சீனியர் நடிகை!
சென்னை: ரஜினியுடன் 32 ஆண்டுகளுக்கு முன்பு நடித்த படத்தின் போட்டோக்களை பிரபல நடிகை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை நதியா. 1980 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தார்.
தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நதியா, ரஜினிகாந்த் உட்பட முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார்.

மீண்டும் தமிழில் என்ட்ரி
இந்நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான ஜெயம் ரவியின் எம் குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாகவும் கல்லூரி பேராசியையாகவும் நடித்திருப்பார் நதியா.

பிளாக்பஸ்டர் ஹிட்
நடிகை நதியா, ரஜினிகாந்துடன் ஆர் சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதி ராஜா படத்தில் இணைந்து நடித்தார். இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்தது.
லக்கி சூப்பர் ஸ்டார்
இதனை முன்னிட்டு நடிகை நதியா, இந்தப் படத்தின் போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, 32 ஆண்டுகள் ஆகிவிட்டது, நம்பவே முடியவில்லை, நேரம் பறந்து போகிறது, ஆனால் நினைவுகள் எப்போதும் இருக்கும்.. என்னுடைய லக்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் என பதிவிட்டுள்ளார்.
இரட்டை வேடத்தில் ரஜினி
ராஜாதி ராஜா படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்தார். நதிய மற்றும் ராதா ஆகியோர் ஜோடியாக நடித்தனர். இதில் ராஜா என்ற கேரக்டரில் பணக்கார இளைஞராகவும் சின்ராசு என்ற கேரக்டரில் அப்பாவி கிராமத்து இளைஞராகவும் ரஜினிகாந்த் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











