லஸானியா .. மேல்நாட்டு ரெசிப்பி.. சமைத்து அசத்திய நதியா.. வைரல் புகைப்படம் !
சென்னை: நடிகை நதியா ட்விட்டரில் சமையல் பற்றியும், சமைக்கும் போது எடுத்த புகைப்படத்தையும் பதிவேற்றியிருக்கிறார்.
Recommended Video
நடிகை நதியா தற்போது அம்மாவாக நடிகையாக பல துடிப்பான விஷயங்களை செய்து வருகிறார் இதோடு சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் தவறாமல் தான் என்ன செய்கிறேன் என்பதை தொடர்ந்து ரசிகர்களிடம் பகிர்ந்தும் வருகிறார்.

நடிகை நதியா லாக்டவுன் சமயத்தில் வீட்டிலே இருப்பதால் தனக்கு நினைவுக்கு வரும் பல விஷயங்களை புகைப்படங்களோடு பதிவேற்றி அதை நினைவுகூறி வருகிறார். முக்கியமாக பல நடிகர்களுடன் நதியா நடிக்கும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் பல சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் என்று தொடர்ந்து தன்னிடம் இருக்கும் நினைவுகளை இந்த லாக்டவுனில் பகிர்ந்து வருகிறார்.
இதன் வரிசையில் தற்போது நதியா தான் சமைத்ததை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். இதில் தான் சமைக்கும் போது எடுக்கப் பட்ட புகைப்படத்துடன் இந்த பதிவை பதிவேற்றியுள்ளார். இதில் நதியா லஸானியா என்ற மேல்நாட்டு உணவை செய்து இருக்கிறார்.

இந்த பதிவில் நதியா "இந்த உணவின் ரகசிய ரெசிப்பி படைப்பாற்றல்" தான் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலர் நல்லா சமைக்கிறீங்க என்று பாராட்டி வருகின்றனர் மேலும் பலரோ புகைப்படங்களில் நதியாவை பார்த்து விட்டு உங்களின் இளமை உங்களை விட்டு இன்னும் போகவில்லை என்று கூறியுள்ளனர்.

நதியாவிடம் நேர்காணல்கள் விழாக்கள் என்று அனைத்து இடத்திலும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி இது தான். நதியாவும் நல்ல உடற்பயிற்சி, யோகா மற்றும் சரியான உணவு தான் இதற்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.

மற்ற நாட்களை போல இந்த கொரன்டைன் நேரத்தை வெளியே சென்று செலவிட முடியாவிட்டாலும் நதியா தன் வீட்டில் இருந்த படியே புத்தகம் வாசிப்பது, யோகா செய்வது மற்றும் சமைப்பது என்று நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்த கொரன்டைன் நேரத்தில் தான் கூடுதலாக சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி வருகிறார் நதியா.


Click it and Unblock the Notifications











