Nagma: நக்மாவைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு.. ஜோதிகா மகள் கான்வகேஷனில் அவங்களும் இருக்காங்கப்பா!
மும்பை: நடிகர் சூர்யா - நடிகை ஜோதிகா தம்பதியரின் மகள் தியா. இவர் தனது உயர்கல்விக்காக மும்பையில் உள்ள சர்வதேச பள்ளியில் சேர்ந்தார். இதனால் சூர்யா மற்றும் ஜோதிகா மொத்தமாக மும்பைக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தனர். இந்நிலையில் நேற்று அதாவது மே 30ஆம் தேதி தியா படித்த பள்ளியில் அவருக்கு பட்டமளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை சூர்யா மற்றும் ஜோதிகா மிகவும் ஆனந்தமாக தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்கள். ஆனால் இந்த பட்டமளிப்பு விழாவில் ஜோதிகாவின் ஒன்றுவிட்ட சகோதரி நக்மாவும் கலந்து கொண்டுள்ளார்.
ஜோதிகா மற்றும் சூர்யா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் இருந்து மும்பைக்கு குடியேறி விட்டார்கள். இவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்ததற்கு காரணமாக பலரும் பலவிதமாக பேசி வந்தார்கள். ஆனால் ஒரு முறை சூர்யா இது தொடர்பாக பேசிய பின்னர் தான் அவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்தது தொடர்பான கிசுகிசுக்கள் அடங்கியது. இது தொடர்பாக சூர்யா பேசுகையில், மகளின் படிப்புக்காக மும்பைக்கு குடிபெயர்ந்து உள்ளோம். சென்னையில் சர்வதேச பள்ளிகள் குறைவு, அதனால்தான் நாங்கள் மும்பைக்கு வந்துள்ளோம். மேலும் ஜோதிகா திருமணத்திற்கு பின்னர் இத்தனை ஆண்டுகளாக எங்களுடன் சென்னையில் இருந்தார். இப்போது அவர் தனது அம்மாவுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதனால் நாங்கள் இங்கு குடிபெயர்ந்தோம்" என்று கூறினார்.

லீடிங் லைட்: சூர்யா - ஜோதிகா தம்பதியரின் மகள், தியா கடந்த ஆண்டில் தனது படிப்பின் ஒரு பகுதியாக, ஆவணப்படம் ஒன்றை இயக்கினார். " லீடிங் லைட்" என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படத்துக்கு மாணவர்கள் அளவிலான குறும்படப் போட்டியில் பரிசு வென்றது. இந்த ஆவணப்படம் திரைத்துறையில் பணிபுரியும் பெண்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்திற்கு, சிறந்த திரைக்கதை, சிறப்பு நடுவர் விருது மற்றும் சிறந்த மாணவர் குறும்படம் என மூன்று விருதுகளை வென்றது.
தியா கான்வகேஷன்: நேற்று சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தங்களது மகளின் பட்டமளிப்பு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்கள். மேலும் இது தொடர்பாக அவர்கள் பகிர்ந்த வீடியோவுக்கு, " இப்போது எங்களுக்கு பெருமையாக உள்ளது. உனது முடிவுகள் எப்போதும் உனது நம்பிக்கைகளை பிரதிபலித்துக் கொண்டே இருக்கட்டும். பயத்தை அல்ல. அம்மா மற்றும் அப்பாவின் வாழ்த்துகள் உனக்கு எப்போதும் உள்ளது தியா என்று பதிவிட்டிருந்தார்கள்.

நக்மா: இந்த நிகழ்ச்சியில், சூர்யா - ஜோதிகா மட்டுமல்லாமல், சூர்யாவின் பெற்றோர்களான நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது மனைவி, அதேபோல் ஜோதிகாவின் பெற்றோர்கள் என அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல் சூர்யாவின் மகன் தேவ் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார். இவர்கள் மட்டுமல்லாமல் நடிகை நக்மாவும் கலந்து கொண்டுள்ளார். நக்மா தான் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் நம்ம நக்மாவா இது. நக்மாவை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு என்று பேசி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் நக்மா மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











