சூர்யாவுக்கு அண்ணி நக்மா வாழ்த்து.. எதுக்குன்னு தெரியுமா!

சென்னை : நடிகை நக்மா சிறப்பான பல படங்களில் நடித்து கோலிவுட்டின் மிகச்சிறந்த நடிகையாக இருந்தவர்.

இவரது தங்கைகள் ஜோதிகா மற்றும் ரோஷினியும் சிறப்பான பல படங்களில் நடித்தனர். குறிப்பாக ஜோதிகா கோலிவுட்டின் கனவுக்கன்னியாக இருந்தவர்.

ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து மணந்துக் கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

நடிகை நக்மா

நடிகை நக்மா

நடிகை நக்மா காதலன் படம் மூலம் சிறப்பான என்ட்ரியை தமிழில் கொடுத்தவர். தொடர்ந்து சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். இவர் முன்னணி நாயகியாக இருந்தபோதே இவரது தங்கைகள் ஜோதிகா மற்றும் ரோஷினி ஆகியோரும் தமிழில் நடிக்கத் துவங்கிவிட்டனர்.

ஜோதிகா சிறப்பான என்ட்ரி

ஜோதிகா சிறப்பான என்ட்ரி

குறிப்பாக குஷி படத்தில் ஜோதிகா நடித்து கோலிவுட்டில் சிறப்பான என்ட்ரியை கொடுத்தார். தொடர்ந்து கோலிவுட்டின் கனவுக்கன்னியாக விளங்கிய ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சிறப்பான படங்கள்

சிறப்பான படங்கள்

சமீப காலங்களில் சூர்யா இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இவரது சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் படங்கள் ரசிகர்களிடையே மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. பல விருதுகளை குவித்தது.

ஆஸ்கர் அகாடமி அழைப்பு

ஆஸ்கர் அகாடமி அழைப்பு

இந்தப் படங்களை அடுத்து சர்வதேச அளவில் கவனிக்கப்படும் ஹீரோவாகியுள்ளார் சூர்யா. தற்போது ஆஸ்கர் அகாடமியின் மோஷன் பிக்சர் ஆப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் குழுவில் உறுப்பினராக சேர ஆஸ்கர் அகாடமி அழைப்பு அனுப்பிய 357 சினிமா பிரபலங்களில் சூர்யாவின் பெயர் இடம்பெற்றுள்ளது.

முதல்வர் பாராட்டு

முதல்வர் பாராட்டு

இதையடுத்து சூர்யாவிற்கு முதல்வர் முக ஸ்டாலின், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த அழைப்பை சூர்யா ஏற்றுள்ளார். மேலும் ஆஸ்கர் அகாடமிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

நக்மா பாராட்டு

நக்மா பாராட்டு

இந்நிலையில் ஜோதிகாவின் அக்கா நக்மா சூர்யாவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தின்மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். ஆஸ்கர் அகாடமியின் அழைப்பை பெற்றுள்ள முதல் தென்னிந்திய நடிகர் என்று குறிப்பிட்டு சூர்யாவின் அழகான மற்றும் ஸ்டைலான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Kamal Haasan | ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகாரம் *Kollywood | Filmibeat Tamil
வைரலாகும் புகைப்படங்கள்

வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை ஜோதிகா அவ்வப்போது தன்னுடைய அக்கா நக்மா மற்றும் தங்கையுடன் தான் இணைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர்களுடன் சூர்யாவும் இருக்கும் புகைப்படங்களும் அவ்வப்போது இணையதளத்தில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X