Nagma - கல்யாணம் ஆகல ஆனா அந்த ஆசை எனக்கு இருக்கு.. நக்மா ஓபன் டாக்

சென்னை: Nagma(நக்மா) நடிகை நக்மா தனக்கு திருமணம் ஆகாதது குறித்து பேசியிருக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவின் சகோதரி நக்மா. நக்மாவும் நடிகை ஆவார். தமிழில் அவர் பாட்ஷா, பிஸ்தா, காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடிருத்திருக்கிறார். ஒருகாலத்தில் நக்மாவும் தமிழில் நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 Actress Nagma Talks about her Marriage

சூப்பர் ஸ்டார் ஜோடி: 1990ஆம் ஆண்டே பாலிவுட்டில் அறிமுகமான நக்மா ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துவந்தார். அவரை இயக்குநர் ஷங்கர் தனது காதலன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார். முதல் படம் ஹிட்டாக அடுத்தடுத்து தமிழிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான பாட்ஷா படத்தில் நடித்து நிறைய ரசிகர்களை சம்பாதித்தார்.

தமிழில் படங்கள்: பாட்ஷா படத்தில் நடித்த பிறகு ரகசிய போலீஸ், வில்லாதி வில்லன், மேட்டுக்குடி, பெரிய தம்பி, அரவிந்தன், பிஸ்தா, ஜானகிராமன் என பல படங்களில் நடித்தார். அதன் பிறகு ஹீரோயின் வாய்ப்புகள் கம்மியாக தீனா படத்தில் ஒரு பாடலுக்கும், சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் நடித்தார். அந்தப் படம்தான் அவர் தமிழில் நடித்த கடைசி படமாகும்.

 Actress Nagma Talks about her Marriage

அரசியல்வாதி: தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தாலும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், போஜ்புரி மொழிகளில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இவர் கடைசியாக 2008ஆம் ஆண்டு போஜ்புரி மொழியில் நடித்ததோடு நடிப்புக்கு மூட்டை கட்டி அரசியலில் அடியெடுத்துவைத்தார். இப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்.

நோ திருமணம்: 48 வயதான நக்மா இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுகுறித்து அவர் அளித்த சமீபத்தில் அளித்த பேட்டியில், "எனக்கு திருமணம் செய்யவேக்கூடாது என்ற எண்ணமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் திருமணம் செய்து குடும்பம், குழந்தைகள் என வாழ்வதற்கு ஆசை இருக்கிறது. அப்படி ஏதும் நடக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இருந்தாலும் திருமணம் செய்துகொள்ளாம்ல் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எனது வாக்கையில் மகிழ்ச்சி குறைவில்லாமல் இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Read more about: nagma நக்மா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X